இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
ஆகாஷவாணியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி
நரேந்திரமோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாக கொண்டுவெளியுறவுக் கொள்கையை கட்டமைத்து வருகிறது. குறைந்த வட்டியில் வெளிநாடுகளுக்கு கடன் வழங்குவதை ஒரு அங்கமாக இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பயனாக இந்திய தொழில் துறை வளர்ச்சி கண்டு வருவதாக வெளியுறவுத் துறாஇ அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்திய அரசின் கடன் உதவித் திட்டங்களின் முலம் இந்திய கம்பெனிகளுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகள் பெருகத் தொடங்கியுள்ளன. இந்திய அரசின் கடன் உதவித் திட்டங்களுக்கு வெளி நாட்டு அரசுகளின் உதவியும் கிடைப்பதால், இந்திய அரசின் தொழில் சார் திட்டங்களை நிறைவேற்றுவது எளிதாக அமைகிறது எனக் கூறலாம்.
64 வளர்ந்து வரும் நாடுகளில் 539 கடன் உதவித் திட்டங்களை இந்திய அரசு நிறைவேற்றி வருகிறது. திட்டங்களைத் திறம்பட நிர்வகிப்பதிலும் தொழில் துறை வளர்ச்சியை உறுதிப்படுத்துவதிலும் இந்தியப் பிரதமர் தனது ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்தியாவை நெருங்கியுள்ள நாடுகளில் அதி வேகமாக இந்திய அரசின் கடன் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
320க்கும் மேலான கடன் உதவித் திட்டங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 181 திட்டங்கள் ஆசியாவிலும் 32 திட்டங்கள் லத்தின் அமெரிக்க நாடுகளிலும் மத்திய ஆசியாவில் 3 திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. இத்திட்டங்களால் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மென்மேலும் வலுப்பெற்று விளங்குகிறது.
பூட்டான் நாட்டின் எரிசக்தித் துறையில் இந்திய அரசின் வளர்ச்சி நோக்கிய பங்களிப்பு பெருமளவில் உதவி புரிகின்றது. பங்களாதேஷ் நாட்டில் ரய்யில்வே மேம்பாலங்கள், இலங்கையில் நிறைவேற்றப்படும் ரயில்வே திட்டங்கள், மின்சக்தித் திட்டங்கள் நேபாளத்தில், மொரிசியஸில் மெட்ரோ திட்டம் போன்றவைகளில் இந்திய அரசின் வெளியுறவுத் துறை மிகுந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது.
எரிசக்தித் துறையில் சூடான், ருவாண்டா, ஜிம்பாப்வே, மாலவி போன்ற நாடுகளுக்கும் சுகாதாரத் துறையில் கினியா, ஜாம்பியா போன்ற நாடுகளுக்கும் இந்திய அரசு கடனுதவித் திட்டங்கள் மூலம் உதவி செய்து வருகிறது
சர்க்கரை உற்ப்த்தி தொழிலில் எதியோப்பியா, கானா போன்ற நாடுகளுக்கும் கட்டட வளர்ச்சித் துறைகளில் காங்கோ, காம்பியா புருண்டி போன்ற நாடுகளுக்கும் இந்திய அரசு கடனுதவித் திட்டங்கள் மூலம் உதவி வருகிறது. தயாரிப்புத் துறையில் இந்திய கம்பெனிகள் ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பங்கு வகித்து வருகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இந்தியக் கடனுதவித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது.
மொரிஷியஸ், சிஷெல்ஸ் போன்ற இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளுக்கு கடனுதவி திட்டங்களை நிறைவேற்றும் வேறு தேவையான மானிய உதவிகளையும் அளிப்பதை இந்திய அரசு கொள்கையாகவே கொண்டுள்ளது.
ஆப்கனிஸ்தான் அரசுக்கான நாடாளுமன்றத்தை நிர்மாணித்தல், இலங்கை அரசுக்கான வீட்டு வசதித் திட்டங்கள், மியான்மர் நாட்டிற்கன போக்குவரத்துத் திட்டங்கள், மொரிஷியஸ் நாட்டில் உச்ச நீதிமன்றம் கட்டித்தருதல், நேபாளத்தில் சுங்கச்சாவடிகளை அமைத்துத் தருதல் என இந்திய தொழில் துறையின் வளர்ச்சியில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் அது மிகையாகாது.
Comments
Post a Comment