புதிய உச்சத்தை தொட்டுள்ள இந்திய-நெதர்லாந்த் உறவுகள்.

ஜவாஹர்லால் நேரு பல்கலை கழக பேராசிரியர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமணகுமார்

17ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுக்கும் - நெதர்லாந்துக்கும் இடையே வரலாற்றுபூர்வ உறவுகள் இருந்து வருகிறது. 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகு இருநாடுகளுக்கிடையேயும் அதிகாரபூர்வ உறவுகள் தோற்றுவிக்கப்பட்டன. 1970 களிலும், 80 களிலும் சீராக வளர்ந்த பொருளாதார உறவுகள், 1990 களில் தாராளமயமாக்களுக்கு பிறகு ஏற்றம் கண்டது. அரசியல், பொருளாதார, சமூக-கலாச்சார நிலையில் இருதரப்பு உறவுகள் அதிகரித்து வருகிறது. உயர் நிலை அளவில் இருநாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணங்களே இதற்க்கு சான்று. 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து பிரதமர் JAN PETER BALKENEDE இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். கடந்த நான்கு வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரதம மந்திரி நிலையில் மூன்று சுற்றுப்பயணகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் MARK RUTTE மிகப்பெரிய வியாபார பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை ஏற்று இந்தியா வந்தது இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பொருளாதார உறவுகளுக்கு ஒரு சான்றாகும். டச்சு நாட்டு அரசர் WILLEM ALEXENDAR ம் அரசி MAXIMA வும் 5 நாள் பயணமாக இந்தியா வந்தனர். 2013 ஆம் ஆண்டு அரசராக பதவியேற்ற பிறகு வில்லெம் அவர்கள் இந்தியாவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்டிருப்பது இது முதல் தடவையாகும். பயிற்சி பெற்ற விமானியான அவர் இந்திய பயணத்தின் போது தானே விமானத்தை செலுத்தி வந்தார். கே.எல்.எம் விமான நிறுவனத்தின் விமானங்களில் துணை விமானியாகவும் இருந்து வருகிறார். நெதர்லாந்தில் அரசியலமைப்பு முடியாட்சி முறை ஆட்சி நடைபெறுகிறது. 2007 ஆம் ஆண்டு தற்போதைய அரசரின் தாயார் அரசி BEATRIX இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

அரச வம்சத்து தம்பதியரை வரவேற்று விருந்தளித்த இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது பொருளாதார கூட்டளித்துவமே என்பதை வலியுறுத்தினார். இந்தியாவில் 100க்கும் அதிகமான டச்சு நிறுவனங்கள் உள்ளது இதற்கு சாட்சியாகும். ஐ. ந. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கும், இன்னும் பிற ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கும் நெதர்லாந்து ஆதரவு அளிக்கிறது. வரலாற்று ரீதியிலான உறவுகளின் அடிப்படையில், புத்தாக்கம், முதலீடு மற்றும் தொழில் நுட்பத்தால் உந்தப்பட்டு இரு தரப்பும் கூட்டளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் தீர்வுகள், ஸ்மார்ட் நகரங்கள், பசுமை எரிசக்தி, ஸ்டார்ட் அப்கள் மற்றும் புதுயுக பொருட்கள் நம்மை நெருங்கி வரவைக்கின்றன என்றும், நதி நீர் புத்துணர்வில் நெதர்லாந்து பெற்றுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அதனிலிருந்து புது விஷயங்களை கற்று கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறினார்.

'நாம் ஒவ்வொருவரும் மற்றொருவரின் வாசல்களில் இருக்கிறோம்' என்று காலஞ்சென்ற இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் 1957 ஆம் ஆண்டு நெதர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது கூறியதை மேற்கோள் காட்டிய அரசர் வில்லெம் அலெக்சாண்டர், பரந்த ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உலக ஒழுங்கை நிலைநாட்ட இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி அடைவதாக கூறினார். ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட இந்திய உறுதிபூண்டடிருப்பது குறித்தும் அவர் பாராட்டினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்தியாவில் முதலீடு செய்யும் ஐந்தாவது மிகப்பெரிய நாடு நெதர்லாந்து என்பதும், வர்த்தக கூட்டளித்துவத்தில் நான்காவது மிகப்பெரிய நாடு நெதர்லாந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை - இந்திய தொழில் சம்மேளனம் கூட்டாக ஏற்ப்பாடு செய்திருந்த 25 ஆவது தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெறும் சமயத்தில் அரச தம்பதியினரின் வருகை அமைந்திருந்தது. இந்த உச்சிமாநாடு கருத்தரங்கம் மற்றும் விளக்கமளிக்கும் அமர்வுகளை கொண்டது. நெதர்லாந்து இதில் கூட்டாளி நாடாகும். இந்த உச்சி மாநாட்டிற்கு நீர் , விவசாயம், உணவு மற்றும் சுகாதாரம் ஆகியன மைய கருத்தாக இருந்தது. இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதுடன், கார்பொரேட், அரசு துறை, மற்றும் அறிவு சார் நிலையங்களுக்கும் 15 இந்திய மற்றும் டச்சு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்பதுத்துவதற்குமான சந்தர்ப்பமாக இது இருந்தது. இந்த உச்சிமாநாட்டை துவக்கி வைத்து பேசிய அரசர் வில்லேம் அலெக்சாண்டர், புத்தாக்கம் என்பது கூட்டாக உருவாக்குவது. புத்தாக்கம் என்பது சர்வதேச அறிவையம், நிபுணத்துவத்தையும் ஒன்று திரட்டி நம் அனைவரையும் பாதிக்கும் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்று கூறினார். நெதர்லாந்தில் 2,35,000 இந்திய வம்சாவளியினர் வசிக்கிறார்கள். இது பிரிட்டனுக்கு அடுத்து மிகப் பெரிய எண்ணிக்கை. நெதர்லாந்தில் படித்து இன்று பிரபலமாக இருக்கும் 50 இந்தியர்களை அரச தம்பதியினர் வரலாற்று சிறப்புமிக்க SAFDARJUDG TOMB ல் இம்மாதம் 15 ஆம் தேதி சந்தித்தனர். ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக, மிக குறைந்த செலவில் ஆங்கில வழியில் உயர்கல்வி கற்க உகந்த நாடாக ஹொலண்ட் மாணர்வகளை தன் வசம் இழுத்து வருகிறது. மும்பையில், டச்சு பிரிவை சேர்ந்தர்வகளை சந்தித்த தம்பதியினர், ‘INDO-DUTCH CONNECTIONS IN THE AGE OF REMBRANDT’ என்ற தலைப்பில் இருநாடுகளுக்கிடையே 400 ஆண்டுகளாக இருந்துவரும் பாரம்பரியத்தை போற்றும் கண்காட்சியையும் துவக்கி வைத்தனர். கேரளாவில் மத்தஞ்சேரியில் உள்ள டச்சு அரண்மனைக்கு விஜயம் செய்த அவர்கள் தங்களது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டனர். அரச தம்பதியினரின் இந்த பயணம் அதிகரித்து வரும் இந்திய-நெதர்லாந்து உறவுகளை பலப்படுத்தும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.