தேசியக் கல்விக் கொள்கை 2020
கல்வியாளர் பாயல் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்
கடந்த வாரம், மத்திய அமைச்சரவை, புதிய தேசியக் கல்விக் கொள்கை (என்இபி) 2020 க்கு ஒப்புதல் அளித்தது. இது பள்ளி மற்றும் உயர் கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது. அமைச்சரவை 34 ஆண்டுகால தேசியக் கல்வி தொடர்பான கொள்கையை மாற்றியதுடன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைக் கல்வி அமைச்சாக மாற்றியது. தேசியக் கல்விக் கொள்கை 2020 இந்தியாவை ‘அறிவு மையமாக’ மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார். கல்வி முறைமையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் வரைவு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் டாக்டர் கே கஸ்துரிரங்கன் அவர்களால் டிசம்பர் 2018 இல் வெளியிடப்பட்டது. புதிய NEP, 6 முதல் 14 வயது வரையிலான கட்டாயப் பள்ளிப்படிப்பை 3 முதல் 18 வயது வரை விரிவுபடுத்துகிறது. . குழந்தைகளுக்குச் சிறந்த கற்றல் விளைவுகளை அடைய உதவுவதற்காக, ஆற்றல் நிறைந்த காலை உணவைச் சத்தான மதிய உணவுடன் வழங்குவது ப்ரீ ஸ்கூல் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
குறிப்பிடத்தக்க மாற்றமாக, பள்ளிக் கல்வியின் தற்போதைய 10 + 2 கட்டமைப்பிலிருந்து, NEP முறையே 3-8 வயது (அடித்தள நிலை), 8-11 (ஆயத்த நிலை), 11-14 (நடுத்தர நிலை) மற்றும் 14-18 (உயர் நிலை) என்று ‘5 + 3 + 3 + 4’ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) க்கு முக்கியத்துவம் அளித்து, புதிய முறையானது குழந்தைகளின் மனநலத் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான கட்டமாக, அங்கன்வாடி / ப்ரீ ஸ்கூல் நிலையின் 3 ஆண்டுகள் கொண்ட 12 ஆண்டு பள்ளிப்படிப்பைக் கொண்டிருக்கும்.
மாணவர்கள் குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரை தங்கள் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் கற்பிக்கப்பட வேண்டும், எந்தவொரு மாணவனுக்கும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று என் ஈ பி உறுதியளிக்கிறது. அடிப்படைக் கல்வியைக் குழந்தைகள் தங்கள் தாய் மொழியில் மிக விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்று இந்தக் கொள்கை தெளிவாகக் கூறுகிறது.
2030 க்குள் 100% மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்) மூலம் ப்ரீ ஸ்கூல் முதல் உயர் நிலை வரை சமச் சீரான கல்வியை வழங்குவதில் NEP கவனம் செலுத்துகிறது. NEP 2020, இடை நின்ற 2 கோடி பள்ளிக் குழந்தைகளை மீண்டும் முறையான மற்றும் திறந்த நிலைப் பள்ளிக்குக் கொண்டு வரும். இதனுடன் NEP 2020 உயர்கல்வியில் 3.5 கோடி புதிய இடங்களை சேர்க்கும். 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ‘அனுபவக் கற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனை’ ஆகியவற்றின் அடிப்படையில் முக்கிய கருத்துக்களில் அதிக கவனம் செலுத்தி, பாடத்திட்டத்தின் சுமையைக் குறைக்கும் விதமாக அமையும். புதிய கொள்கை, மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதும் சுதந்தரத்தை அளிக்கிறது.
ஒரு புதிய அங்கீகாரக் கட்டமைப்பும் ஒரு சுயாதீன அதிகாரமும் தனியார் மற்றும் பொதுப் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும். அதே சமயம் இந்திய உயர் கல்வி ஆணையம் (HECI) மருத்துவ மற்றும் சட்டக் கல்வியைத் தவிர்த்து அனைத்து உயர் கல்வியையும் கட்டுப்படுத்தும். தொழிற்கல்வி, 6 ஆம் வகுப்பிலிருந்து இன்டர்ன்ஷிப் மூலம் தொடங்க உள்ளது மற்றும் உயர் கல்வி பாடத்திட்டத்தில் பாடங்களைத் தேர்வு செய்யும் முறையும் விரிவு படுத்தப்படும்.
என்.சி.ஈ.ஆர்.டி.யுடன் கலந்தாலோசித்து தேசிய ஆசிரியர் கவுன்சில் (என்.சி.டி.இ) 2021 க்குள் ஆசிரியர் கல்விக்கான புதிய மற்றும் விரிவான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை (என்.சி.எஃப்.டி.இ) வடிவமைக்கும். 2035 வாக்கில், உயர்கல்வியில் ஜி.இ.ஆர் 50% ஆக உயர்த்தப்பட உள்ளது. NEP 2020 இன் கீழ், பாடத்திட்டம், தொழில்சார் மற்றும் பிற செயல்பாடுகளிடை பெரிய இடைவெளி இல்லாத ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும். கற்றல் விளைவுகளில் மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான வளர்ச்சி அறிக்கை அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்தப் புதிய கல்விக் கொள்கையின் கீழ், இளங்கலை மாணவர்கள், இடையில் கல்வியைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டாலும், ஒரு வருடம் கழித்து சான்றிதழோடும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிப்ளோமா சான்றிதழோடும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இளங்கலை பட்டத்துடனும் வெளியேறலாம். அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிலைப் படிப்புகள் பல்துறைத் தொடர்புடையவையாக இருக்கும்; எம்.ஃபில் படிப்புகள் நிறுத்தப்படும். கிரெடிட் புள்ளிகளைச் சேகரிக்க அரசாங்கம் ஒரு கல்வி கிரெடிட் வங்கியை அமைக்கும். 2030 க்குள், 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் பட்டம், ஆசிரியராவதற்கான குறைந்தபட்ச பட்டப்படிப்பாக இருக்கும். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்-களுக்கு இணையாக, உலகளாவிய தரங்களைக் கொண்ட சிறந்த பலத் துறைக் கல்விக்கான மாதிரிகளாக, பல் துறைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், Multidisciplinary Education and Research Universities (MERUs) (மேரு) அமைக்கப்பட உள்ளன.
இந்தப் புதிய கொள்கையின் கீழ், ஒரு வலுவான ஆராய்ச்சி கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட உள்ளது. மேலும், சமபங்குடன் தொழில்நுட்பத்தை அதிகரிப்பதற்காக ஒரு தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் உருவாக்கப்பட உள்ளது.
பின்தங்கிய பகுதிகள் மற்றும் குழுக்களுக்கான இரு பாலினத்தவருக்குமான சமமான வாய்ப்பு, நிதி மற்றும் சிறப்பு கல்வி மண்டலங்களின் அவசியத்தை NEP 2020 வலியுறுத்துகிறது. கல்வித் துறையில் பொது முதலீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% ஆக உயர்த்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது, தற்போது இது 4.6% ஆக உள்ளது.
எனவே, NEP 2020 குழந்தைக் கல்விக்கு உள்ளடக்கிய, பங்கேற்பு மற்றும் முழுமையான அணுகுமுறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படும் போது 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும்.

Comments
Post a Comment