"விவசாயம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா சுய - சார்பை நோக்கி செல்கிறது"
பத்திரிக்கையாளர் சங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.
விவசாயம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியாவின் வலிமையானது அதன் சுய சார்பில் உள்ளது. உலகளாவிய அளவில் தன்னை முன்னெடுத்துச் செல்வதே தனது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாய உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வசதியை துவக்கி வைத்தது இதற்கு மறைமுகமாகும்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 101 பாதுகாப்பு பொருட்களை பட்டியலிட்டுள்ளார், இந்த பொருட்களின் இறக்குமதியானது குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு தடை விதிக்கப்படும். இந்த இரண்டு முன்னேற்றங்களும் இந்தியா தன்னை சுயசார்பு நாடாக மாற்றிக் கொள்ளும் இலக்கிற்கு புதிய வழி வகுக்கும். இதனால், உலகிலேயே வேகமாக முன்னேறும் பொருளாதார நாடு இந்தியா என்ற குறி ச்சொல்லும் தொடரும்.
விவசாய உட்கட்டமைப்பு நிதியை பொருத்தவரை , அதன் முக்கிய நோக்கம் ஆனது, நாட்டின் விவசாய சமுதாயம், அவர்களது உற்பத்திக்கு சிறந்த மதிப்பு மற்றும் விவசாய தயாரிப்பு பொருட்களை சிறந்த விலையில் விற்பது போன்றவற்றுக்கு வழிவகுப்பது ஆகும். , விவசாயத் துறையில் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கும் இந்த நிதியானது பெரிய அளவில் உதவும்.
இந்தியாவில் , ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையானது இன்னும் விவசாயத்தையே அவர்களது முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ள து, கிடங்குகள், குளிர்சாதன சேமிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் முதலீடுகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.
இதில் , குறைந்த மற்றும் அதிக கால கடன் வசதியை விவசாய உட்கட்டமைப்பு நிதி வழங்குகின்றது, அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உட்கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். முதன்மை விவசாய கடன் சங்கங்கள் (PACS) , உழவர் உற்பத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள், விவசாய உட்கட்டமைப்பு நிதி மூலம் பயனடைவார்கள்.
உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா திகழ, விவசாய துறையை ஒரு எடுத்துக்காட்டாக மாற்றுவது மிக முக்கிய நோக்கமாக உள்ளது. உலகம் covid 19 மூலம் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு வரும் இந்த வேளையில், இந்தியாவின் விவசாயத்துறை மற்றும் மருத்துவத் துறை, ஏற்றுமதியின் மூலம் உணவு விநியோக சங்கிலியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
போன வருடத்தை ஒப்பிடுகையில், 2020 ஆம் வருடம் மார்ச் மற்றும் ஜூன் மாத காலகட்டத்தில் விவசாய ஏற்றுமதியானது 23.24 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அடுத்த சில வருடங்களில் இந்தியா , சுய சார்பு நாடாக திகழ்வதில், விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
இதேபோன்று, 2020 மற்றும் 2024 ஆம் வருட காலகட்டத்தில் 101 பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்வதில் படிப்படியாக இந்தியா தடை விதிப்பதன் மூலம், பாதுகாப்பு துறை உள்ளிட்ட முக்கியமான தொழில்நுட்ப துறைகளில் இந்தியா சுயசார்பு நாடாக திகழ்வதற்கு பெரிதும் வழிவகுக்கும்.
101 பாதுகாப்பு பொருட்களை தடை விதிப்பதன் மூலம், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள், இந்த துறையில் உள்நாட்டில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உள்நாட்டு ஒப்பந்தம் ஏற்படுத்த வழிவகுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ராணுவம் மற்றும் விமான துறை மூலமாக தலா 130000/- கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும், கடற்படை மூலமாக 140000/- கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடை விதிக்கப்பட்ட பொருட்களில் சாதாரண பாகங்கள் மட்டுமல்லாமல் மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட பீரங்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானங்கள், சிறிய போர் ஹெலிகாப்டர்கள், மற்றும் ரேடார்கள் போன்றவையும் அடங்கும்.
"ஆத்ம நிர்பார்" என்ற சுயசார்பு திட்டத்தில் , பாதுகாப்பு துறையில் இது ஒரு மிக முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியின் மூலம், தடை விதிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, இந்திய பாதுகாப்பு தொழில் துறைக்கு மிக பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதன்மூலம் அவர்கள் தங்களது சொந்த வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை ஏற்படுத்த முடியும், மற்றும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் முன்னேற்ற அமைப்பின் DRDO வின், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆயுத படைகள், பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பெறுவதில் எந்தவித பிரச்சனைகளும், இல்லாமல் இருக்க, தயாரிப்பு மற்றும் காலக்கெடு போன்றவற்றில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரம் வலிமை பெறும் மற்றும் இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதார நாடாக திகழ்வதற்கும் பெரிதும் உதவும்.
இந்தியா சுயசார்பு நாடாக திகழ்வதன் மூலம் மற்ற நாடுகள் உடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என்ற அர்த்தமில்லை, சுயசார்பு நாடாக மாறுவதன் மூலம் உலக பொருளாதாரத்தில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதை இந்த அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
Comments
Post a Comment