திக்கு திசை தெரியாமல் நடுக்கடலில் சிக்கி திணறும் பாகிஸ்தான்


ஐந்து ரஃபேல் போர் விமானங்களடங்கிய முதல் தொகுதி இந்தியாவில் வந்திறங்கிய உடனே பாகிஸ்தானின் அரசு இயந்திரங்கள் அலறலை அதிகமாக்கியிருக்கின்றன. இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை சமமற்ற வகையில் அதிகரித்து வருவதாகவும், தெற்காசியாவில் இது ஆயுதபோட்டிக்கு வழிவகுக்ககூடும் என்பதாகவும் அதனால் உலக சமூகமானது இந்தியாவை அறிவுறுத்தி இதனை தடுக்கவேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலகம் உலக சமூகத்தை வலியுறுத்தி கேட்டுகொண்டிருக்கிறது. இந்த அனுமானம் உண்மைதன்மை சிறிதுமற்றது மட்டுமல்லாமல் பெரும் நகைப்புக்கிடமானதும் ஆகும்.

இந்திய விமானப்படையில் இணைப்பதற்காக இந்தியா 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவது கண்டு பாகிஸ்தான் ஆடிப்போயிருக்கிறது. 4++ தலைமுறையை சேர்ந்ததும், அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை உடையதுமான ரஃபேல் ஜெட் விமானங்களை இந்தியா வாங்குவது, நம் நாட்டின் அண்டையிலுள்ள பல நாடுகளை பெரிதும் கலங்க அடித்திருக்கிறது.

இந்தியா ஆயுதங்களை அதிக அளவில் சேகரித்து வருவதாக கூறும் பாகிஸ்தானின் குற்றசாட்டுகளில் உண்மையில்லை என்பதுடன் பாகிஸ்தானின் முதிர்ச்சியின்மையையே இது காட்டுகிறது. இந்தியா தனது படைகளை நவீனப்படுத்தி வருகிறது. இறையாண்மையுள்ள நாடான இந்தியாவிற்கு அதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது. என்றாலும் பாகிஸ்தான் விமான படையின் எஃப் 16 ரக போர் விமானங்களை விட ரஃபேல் வகை விமானங்கள் மிகவும் மேலானவை என்பதே இந்த அலறலுக்கான உண்மையான காரணமாகும். ரஃஃபேல் விமானமானது தொழில் நுட்பத்தில் மிக சிறந்த அதி நவீன போர்விமானமாகும், அமெரிக்காவால் அளிக்கப்பட்ட பாகிஸ்தானிய எஃப் 16 வகை பழய வடிவமைப்புடையதாகும். முன்பு வடிவமைக்கபட்ட எஃப் 16 வகை விமானங்காள் 75 கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்ககூடியவையாகும். ஆனால் 2010 ஆம் ஆண்டில் 100 கிலோமீட்டர்கள் சென்று தாக்ககூடிய AIM-120C-5 ரக எஃப் 16 விமான தொகுதி ஒன்றை பாகிஸ்தான் பெற்றது.

ஆனால் 4++ தலைமுறை ரஃபேல் ஜெட் விமானங்கள், அபாயகரமான BVRAAM (கண்களுக்கு புலப்படா தூர விண்ணிலிருந்து விண்ணில் தாக்கும் ஏவுகணை) Meteor ஏற்றபட்டுள்ள ரஃபேல் விமானங்களினால், AMRAAM கொண்ட பாகிஸ்தானிய எஃப் 16 ரக போர் விமானங்கள் நேரடி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. மிக அதிகமாக பேசப்பட்ட பாகிஸ்தான் விமானபடையின் JF-17 ரக போர் விமானங்களும் கூட ரஃபேலுக்கு எதிரே பெரும் அபாயத்தை சந்திக்கும். Meteor ஏவுகணையை MBDA தயாரித்துள்ளது; இது இந்திய விமானப்படையின் ஆட்ட்த்தின் போக்கையே மாற்றும் திறன் படைத்தது. ப்ரிட்டனின் ராயல் விமானபடையில் இருக்கும் மிக வலிமையான ஐந்தாம் தலைமுறை எஃப் 35 ரக போர் விமானங்களும் கூட Meteor ஏவுகணைகளைத்தான் பொருத்தியுள்ளன.

ராடார் கருவியால் வழி நடத்தப்படும் இந்த விண்ணிலிருந்து விண்ணுக்கு சீறி பாய்ந்து தாக்கும் ஏவுகணை பொருத்தப்பட்ட இந்த விமானம் எதிரியின் ராடார் கண்களுக்கு புலப்படாது. இதற்கான சக்தியை உந்துவிசை அமைப்பின் மூலம் இது பெறுகிறது; GmbH-ன் திட எரிபொருளை குழாய் ராக்கெட் அமைப்பின் மூலம் பெற்று இது பறக்கிறது. இந்த அமைப்பிற்கு ராம்ஜெட் என்று பெயர். இந்த ராம்ஜெட் உந்துவிசை அமைப்பானது இலக்கை நோக்கி செல்லும் விமானத்தின் பல்வேறு கட்டங்களில், இயந்திர (எஞ்சின்) சக்தியை கட்டுபடுத்தி வழி நடத்தும் சக்தியை Meteor-க்கு இது அளிக்கிறது. விண்ணிலிருந்து விண்ணுக்கு தாக்கும் நிலையான மற்ற ஏவுகளைகளின் உந்துவிசை அமைப்பில் இத்தகைய அமைப்பு கிடையாது.

இந்த திறனானது Meteor ஏவுகணைக்கு எதிரி தப்பிக்க வழியற்ற பெரும் மண்டலத்தை உருவாக்கி தருகிறது- அதாவது தாக்கபடாமல் எதிரி இலக்கு தப்பிப்பதற்கான சாத்தியகூற்றை குறைத்து அதே சமயம் தாக்கப்படுவதற்கான வாய்ப்பை மிக அதிகமாக்கி தருகிறது இந்த உந்துவிசை அமைப்பு. 120 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்க கூடிய திறம் படைத்த இது, வானிலை நிலவரம் மிக மோசமாக இருக்கும்போதும், வெகு தூர தொலைவுகளில் உள்ள அச்சுறுத்தல்களை கண்டறிந்து வேட்டையாட வழி வகுத்து தருகிறது.

பாதுகாப்பு துறை வல்லுனர்களின் கூற்று படி, பாகிஸ்தானின் அச்சம் ரஃபேல் விமானத்தை கண்டு மட்டும் அல்ல; அதிலுள்ளா அதி பயங்கர ஆயுதங்களை கண்டும் அச்சப்படுகிறது. ஆம்ராம் வகை ஏவுகணைகளை விட Meteor ஏவுகணை பல மடங்கு மேம்பட்டது என்பதால எஃப் 16 ரக விமானங்கள் நேரடி அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. பல காலங்களாக தன் எஃப் 16 ரக போர் விமானங்களின் மேன்மை குறித்து இஸ்லாமாபாத் பெருமை அடித்து கொண்டிருந்தது; தற்போது இந்திய விமானபடையின் ரஃபேல் அந்த பெருமையை செல்லாமல் செய்து விட்டது.

மிகவும் பொறுப்பு வாய்ந்த உலக சக்திகளில் ஒன்றான இந்தியா தனது இராணுவ பலத்தை என்றுமே பறைசாற்றி கொண்டதில்லிய. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தடுப்பு நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்தியா தனது மொத்த உள் உற்பத்தியில் (2020-21 கணக்கின்படி) வெறும் 1.5 சதவிகிதத்தைதான் பாதுகாப்பிற்காக செலவிடுகிறது; ஆனால் பாகிஸ்தானோ 2018-19-ல் தனது மொத்த உள் உற்பத்தியில் 4 சதவிகிதத்தை பாதுகாப்பிற்காக செலவிட்டிருக்கிறது. வெகு விரைவிலோ அல்லது சிறிது காலம் கழித்தோ பிணை தொகுப்புகள் கேட்கவேண்டிய நிலையில் இருக்கும் பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு இது மிகபெரும் தொகையாகும். சமூக துறைக்காக தனது மொத்த உள் உற்பத்தியில் இந்தியா 7 சதவிகிதத்தை செலவழிக்கிறது; ஆனால் பாகிஸ்தானோ வெறும் 3 சதவிகிதத்தைதான் இந்த முக்கியமான துறைக்காக செலவழிக்கிறது. கொவிட் 19 பெருந்தொற்றை எதிர் கொள்ள தனது மொத்த உள் உற்பத்தியில் இந்தியா 10 சதவிகித அளவுக்கு (20 லட்சம் கோடி ரூபாய்கள்) நிவாரண தொகுப்புகளை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் கொவிட் 19 நிவாரண தொகுப்பு முற்றிலும் குறைவு எனவும் போதுமானதாக இல்லை எனவும் பாகிஸ்தானின் சாமான்ய மக்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.

இதற்கிடையே எப்போதும் இந்தியாவிற்கு போதனை செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களுக்கு தங்களது ஒற்றுமையை காட்டுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் முசாபராபாத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். இந்தியாவை தாக்கும் பயங்கரவாத குழுக்களை வளர்க்கும் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்த பயணத்திற்கான விரிவான பயண திட்டத்தை உருவாக்குகிறது. சட்ட விரோதமான, அங்கீகாரமற்ற PoK சட்டசபையில் திரு கான் பேசுவதற்கு திட்டமிடபடுகிறது. அங்கு வெளி நாட்டு பத்திரிக்கையாளர்களை கள பயணம் பாகிஸ்தான் அழைத்து செல்ல உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எப்போதும் போல ஐ.எஸ்.ஐ அமைப்பு நடத்தி வரும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அவர்கள் அணுகமுடியாத வகையில் பார்த்துகொள்ளப்படும்.

அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.