ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சு வார்த்தை நடவடிக்கை பிராந்திய அதிகாரமயமாக்களாக ஆகி விடக்கூடாது
ஆப்கானிஸ்தான், தாலிபான் மற்றும் அமெரிக்காவிடையிலான அமைதி பேச்சு ஆரம்பமாகும் என்ற நம்பிக்கை தற்போது பிரகாசமாகியுள்ளது. இந்த மாதம் 7 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை காபூலில் நடைபெற்ற மூன்று நாள் பிரமாண்ட பேரவை (LOYA JIRGA) கூட்டத்தின் மூலம் இது தெளிவாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மீதமுள்ள 400 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. தாலிபான்களுக்கு வழங்கப்பட்ட இந்த சலுகை மூலம் அமைதிக்கான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தோஹாவில் தாலிபான் மற்றும் அமெரிக்காவிடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின் பின்னணியில் இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த உடன்படிக்கையின் படி அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் சிறையிலுள்ள தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்து ஆறு மாதங்களில் ஐயாயிரம் தாலிபான் கைதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்தது. மீதம் 400 கைதிகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் கொடுங்குற்றங்கள் செய்தவர்கள் என்று கூறி அதிபர் அஷ்ரப் காணி (ASHRAF GHANI) மறுத்து வந்தார். இறுதியில் தாலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அமைதி பேச்சுக்கான பாதை தெளிவானாலும், நீடித்த அமைதி நிலைநாட்டப்படுமா என்ற சந்தேகம் உள்ளது. பாகிஸ்தானிற்கு வெளியே இருந்து செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் உட்பட பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பல தீவிரவாத குழுக்கள் இஸ்லாமாபாத்தின் நிழலாக செயல்படுகின்றன. அதன் நிர்வாக அமைப்பின் கெட்ட எண்ணங்களை நிறைவேற்றி வருகின்றன. அண்டை நாடுகளிலும் தீவிரவாத செயல்களில் அவை ஈடுபடுகின்றன. இந்த தீவிரவாத குழுக்களால் இந்தியா நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விஷயத்திலும் இதுவே தொடர் நிஜமாகவே இருக்கிறது.
இந்த பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு, இந்த தீவிரவாத குழுக்களை சீர்குலைப்பது தவிர்க்க முடியாத கட்டாயமாகும். ஒரு பக்கம் பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் மறுபக்கம் அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய தேசங்களுக்குள் இருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமத் ஹனீப் அட்மார் (MOHAMMED HANEEF ATMAR) வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபானை மட்டும் நாங்கள் எதிர்த்து போராடவில்லை என்றும் நாட்டுக்கு வெளியே நான்கு தீவிரவாத குழுக்களுக்குள் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார். முதலாவது, உள்நாட்டு தீவிரவாத குழு, இரண்டாவது, உஸ்பேக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமிய இயக்கம் மற்றும் கிழக்கு துர்கிஸ்தானின் இஸ்லாமிய இயக்கம். மூன்றாவதாக இருப்பது லஸ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-மொஹம்மது போன்ற பாகிஸ்தானி தீவிரவாத குழுக்கள் என்று அவர் விளக்கி கூறியுள்ளார். இதை விட அவர் குறிப்பிட்டு வேறு எதுவும் சொல்லத்தேவை இல்லை. ஆகவே, ஆப்கானிஸ்தானின் அமைதிக்கு சவால்களே அதிகம்.
அப்பகுதியிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் உருவான வெற்றிடத்தை பாகிஸ்தான்-சீனா நிரப்பி வருவது வெளிப்படையாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானையும் அதைத் தாண்டியும் சீனா முன்னேறி வருகிறது. மேலும், ஈரானிலுள்ள கனிமம் மற்றும் எண்ணெய் வளங்களையும் பெய்ஜிங் குறிவைத்துவருகிறது. தனது பெல்ட் மற்றும் சாலை முயற்சி மற்றும் பிற திட்டங்கள் மூலம் ஈரானில் 400 பில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்ய சீனா ஆர்வம் காட்டி வருகிறது. இந்த செக்கர் விளையாட்டில் ஆப்கானிஸ்தான் ஒரு கட்டமாக பார்க்கப்படலாம்.
பாகிஸ்தானும் சீனாவும் சமீபத்தில் செய்து கொண்ட உளவுத் தகவல்கள் பகிர்வு உடன்படிக்கை இதற்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதை அந்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் கவனிக்க தவறிவிடக்கூடாது.
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், நாடாளுமன்ற வளாகம் மற்றும் சல்மா அணைக்கட்டு ஆகியவற்றை கட்டி ஆப்கானிஸ்தானில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் இந்திய பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஆப்கானிஸ்தானில் இந்தியா முதலீடு செயதுள்ளது. இதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்சமயம், ஆப்கானிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு கொரோணா தோற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் வெளியுலகம் இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. குறிப்பாக, அந்தப் பகுதியில் உள்ள பிற நாடுகள் அங்கு காலூன்ற முனைப்புடன் இருக்கின்றன. நீண்ட காலமாக துயரங்களை அனுபவித்து வரும் ஆப்கானிஸ்தான் மக்களின் குரல்களை கேட்கவேண்டிய நேரம் இது. அதற்கு அவர்கள் உரித்தானவர்கள்.
அரசியல் விமர்சகர் எம்.கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் கே. லட்சுமண குமார்.
Comments
Post a Comment