இலங்கை நாடாளுமன்ற தேர்தல்கள் 2020 : ராஜபக்ஷேக்களுக்கு பெரும்பான்மை



புதனன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. பிரதமர் மகிந்தா ராஜபக் ஷே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியானது 59.09 சதவிகித வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த கட்சியானது 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் இருக்கைகள் உட்பட 145 இருக்கைகளை இந்த தேர்தலில் பெற்றிருக்கிறது. புதிதாக உருவான சமாகி ஜன பாலவேகயா கூட்டணி மொத்தம் 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முக்கியமான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியானது 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையின் மிக பழைய கட்சியும், 2015-19 ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த தேசிய ஒற்றுமை அரசை வழி நடத்திய ஐக்கிய தேசிய கட்சியானது ஒரே ஒரு இடத்தை அதுவும் தேசிய பட்டியலின் ஊடாக பெற்றுள்ளது. விகிதாச்சார பிரதினிதித்துவ தேர்தல் முறையை இலங்கை பின்பற்றி வருகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது - நாடாளுமன்றத்தின் 225 இருக்கைகளில், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர், 198 உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இம்முறை தேர்தலானது கொரொனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அசாதாரணமான சூழ் நிலைகளுக்கிடையே நடைபெற்றது. உலகெங்கும் பரவியுள்ள பெருந்தொற்றுக்கிடையே, வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த முதல் தெற்காசிய நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிட்டியுள்ளது. கொரொனா வைரஸ் பரவல் குறித்த அச்சங்களுக்கிடையேயும், 71 சதவிகித வாக்காளர்கள் புதனன்று நடந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர். சுகாதார அமைச்சக வழிகாட்டுதல்களின் படி கொவிட் 19 பெருந்தொற்று, தேர்தலினால் சமூக பரவலாக மாறாமல் தடுக்க நாடெங்கிலும் இருந்த 12,985 வாக்கு சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏறக்குறைய 10,000 சுகாதார பணியாளர்கள், 69,000 காவல் துறையினர் மற்றும் 3,00,00 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிற்சில வன்முறை சம்பவங்கள், தேர்தல் விதிமுறைகளை மீறியது போன்றவற்றை தவிர, பெரும்பான்மையாக அமைதியான சூழலிலே தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகளை அடுத்து மகிந்த ராஜபக் ஷே தன் மீது இலங்கை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது ஆட்சியின் கீழ், இலங்கைக்கு ஏமாற்றம் ஏற்படாது என்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் அவரது கட்சியும் உறுதி அளித்துள்ளனர். எஸெல்பி தலைமையிலான அரசின் முக்கியமான கொள்கை முன்னுரிமைகளென, தேர்தல் அறிக்கையில், தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை, அணி சேரா வெளியுறவு கொள்கை, ஊழலற்ற நிர்வாகம், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் புதிய அரசியல் அமைப்பு சட்டம், துடிப்பான மனித வளம், மக்களது நலத்தை முன்னிறுத்திய பொருளாதார மேம்பாடு, தொழில் நுட்பம் சார்ந்த சமூகம், நாட்டின் வளங்களை மேம்படுத்துதல், நீடித்த சுற்றுசூழல் மேலாண்மை, ஒழுக்கமான, சட்டங்களை மதிக்கும் விழுமியமான சமூகம் ஆகியவை கூறப்பட்டிருந்தன. இந்த கொள்கைகளை அமல்படுத்துவதற்கு, முக்கியமாக புதிய அரசியலமைப்பு சட்டம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் அரசிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்.

ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், எசெல்எஃப்பியின் ஒன்று மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஒரு உறுப்பினர் ஆதரவுடன், இலங்கை பொது ஜன பெரமுன கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஒரு இருக்கையே குறைவு என்ற நிலையில் பெரும்பான்மை ஆதரவை பெற்றிருக்கிறது . அரசு கொண்டு வர உத்தேசித்திருக்கும் சீர்திருத்தங்களை கொண்டு வரவும், அறிவித்திருக்கும் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஒரு இருக்கை மட்டுமே குறைவாக உள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றம் கூடவேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகஸ்ட் 20 அன்று முதல் முறையாக கூட உள்ள கூட்டத்தில் 16வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அமைப்பு தெளிவாக தெரிந்து விடும்.

வெற்றிகரமாக நாடாளுமன்ற தேர்தல்களை நடத்தி முடித்ததற்காக பிரதமர் திரு நரேந்த்ர மோதி அவர்கள் இலங்கை பிரதமர் திரு மஹிந்த ராஜபக்ஷேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கொவிட் 19 பெருந்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள தடைகளுகு இடையிலும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களை திறம்பட நடத்தியமைக்காக அன்னாட்டு அரசுக்கும், தேர்தல் முன்னின்று நடத்திய அரசு நிறுவனங்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். மிகுந்த ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்றமைக்காக இலங்கை மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்த பிரதமர், இந்த பங்கேற்பானது இரு நாடுகளும் வலுவான ஜன நாயக விழுமியங்களை பகிர்ந்து கொள்வதை பிரதிபலிப்பதாக கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளானது இலங்கை பொது ஜன பெரமுன கட்சியானது மிகவும் சிறப்பாக தேர்தலை சந்தித்திருக்கிறது என்பதை காட்டுவதாக கூறியுள்ள இந்திய பிரதமர், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷேவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்தியுள்ளார்.


இரு நாடுகளுக்கும் இடையேயான இணக்கமான நீண்ட கால ஒத்துழைப்பையும் உறவுகளையும் நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், மிக பழமையானதும், பல்வேறு பரிமாணங்களை கொண்டதுமான இந்திய இலங்கை நட்புறவை வலுப்படுத்த இணைந்து பாடுபடுவோம் என்ற தங்களது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இரு தரப்பு உறவுகளின் அனைத்து
துறைகளிலும், வெகு சீக்கிரமாக முன்னேறவேண்டியிருப்பதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்


உத்தரபிரதேசத்தில் புத்தமதத்தினரின் புனித தலமான குஷி நகர் பகுதியில். சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து திரு ராஜபக்ஷெவிடம் தெரிவித்த பிரதமர் திரு நரேந்த்ர மோதி, குஷி நகர் வெகு விரைவில் இலங்கையிலிருந்து வரவிருக்கும் பயணிகளை வரவேற்க காத்துகொண்டிருப்பதாக கூறினார்.

கொவிட் 19 பெருந்தொற்று எதிர்வைத்துள்ள சவால்களை எதிர் கொள்வதற்கு இரு நாடுகளும் நெருக்கமான தொடர்பில் இருப்பது என இரு நாட்டு தலைவர்களும் ஏற்றுகொண்டுள்ளனர்; மேலும் வரவிருக்கும் நாட்களில் இரு தரப்பு உறவுகளை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வது என்றும் முடிவெடுத்துள்ளனர்.

இந்திய பெருங்கடல் ப்ராந்திய ஆய்வாளர் குல்பின் சுல்தானா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.