பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியை வேகப்படுத்தும் – ரிசர்வ் வங்கி கருத்து
மூத்த பொருளாதாரப் பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்
பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தில் COVID-19 இன் பாதகமான தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள ஒரு நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் விகிதத்தை மாற்றாமல் விட்ட, பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாடு உண்மையில் நடைமுறை சாத்தியமானது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஏற்கனவே குறைந்த அளவான 4 சதவீதமாக இருக்கும் நிலையில், பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களைக் குறைப்பதைத் தவிர்த்து, புத்துயிர் பெறுவதற்கான தேவைக்கு ஏற்ப, கடன்களை மறுசீரமைத்தல் போன்ற மிகவும் தேவையான நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியது போல், "வட்டி விகிதத்தை மாறாமல் வைத்திருக்கவும் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான தாராளமயப் போக்கை தொடரவும் எம் பி சி முடிவு செய்தது. “
ரிசர்வ் வங்கி கடைசியாக தனது கொள்கை விகிதத்தை மே 22 அன்று திருத்தியது. இது வட்டி விகிதத்தை குறைந்த அளவிற்கு குறைப்பதன் மூலம் தேவையை அதிகரிக்கும். வேகமாக மாறிவரும் பொருளாதார சூழலும், மோசமடைந்து வரும் வளர்ச்சிக் கண்ணோட்டமும் MPC இன் சிறப்புக் கூட்டங்களை அவசியமாக்கியது- முதலில் மார்ச் மாதத்திலும் மீண்டும் இந்த ஆண்டு மே மாதத்திலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த ஊரடங்குகளின் காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு எதிர்பார்த்த படியே இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகையில், COVID-19 இன் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த நேரத்தில் கடன்களை மறுசீரமைப்பது மிகவும் அவசியம் என்றும் கூறுகிறார்கள்..
சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போல், "மறுசீரமைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இது குறித்து நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொள்கையளவில் மறுசீரமைப்பு தேவைப்படலாம் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அழுத்தத்தில் உள்ள கடனாளிகளுக்கு ‘மறுசீரமைப்பு கட்டமைப்பை’ உருவாக்குவதற்காக கே வி காமத் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்து ரிசர்வ் வங்கி இந்தச் சூழலுக்கு ஏற்ற சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை கடன் வழங்குபவர்களுக்குப் பெரிதும் உதவும்.
கடன் ஒழுங்கைப் பராமரிப்பதன் மூலம், ரிசர்வ் வங்கி தனிப்பட்ட வங்கிகளுக்கு தகுதி பெறுவதற்கான நிதி அளவுருக்களையும் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்மொழியப்பட்ட உயர் மட்ட குழு இதன் விதிகளை தீர்மானிக்கும்.
திரு. காமத் போன்ற புகழ்பெற்ற மற்றும் உயர்மட்ட வங்கியாளர் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவதால், கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, நிதி அளவுருக்கள் பாரபட்சமற்ற மற்றும் தாராளமயமானதாக இருக்கும் என்ற ஆறுதலையும் உறுதியையும் அளிக்கிறது.
COVID-19 ஆல் ஏற்படும் விசித்திரமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்ள முற்றிலும் மாறுபட்ட உத்தியைக் கையாள வேண்டியிருக்கும். இப்போது, காலத்தின் தேவை கடன் ஒழுங்கில் சமரசம் செய்யாமல் தாராளமய கடன் மறுசீரமைப்பு திட்டமாகும்.
நூற்றாண்டின் மிகப் பெரிய இந்த நோய்த்தொற்றுக்காலத்தில், உள் நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி பொறுப்பான பங்காற்றியுள்ளது. உதாரணமாக, வீட்டு வசதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நபார்டுக்குப் பணப்புழக்கத்தை ரூ.5000 கோடி வரை அதிகரித்தது போன்ற நடவடிக்கைகள், அழுத்தத்தில் உள்ள துறைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
இதேபோல், தங்கக் கடன்களுக்கான மதிப்பு விகிதத்தில் 90 சதவீதம் வரை தளர்த்த ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு, வருமான இழப்பு காரணமாக கடுமையான பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாகும்.
கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், அதிக சொத்துக்களைக் கொண்ட குடும்பங்கள் தங்களுடைய தங்கத்தின் மீது அதிக கடன் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் மற்றொரு குறிப்பிடத்தக்க முடிவு முன்னுரிமைத் துறையில் “ஸ்டார்ட் அப்களை” சேர்ப்பது தொடர்பானது. இதன் விளைவாக வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு கடன் வாங்குவதற்கான செலவு குறையும். அதேபோல், மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) கடன் மறுசீரமைப்பு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மிகவும் தேவையான மற்றும் வரவேற்கத் தக்க அம்சங்களாகும்.
நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், நாட்டின் சில பகுதிகளை மீண்டும் திறந்து வைத்ததைத் தொடர்ந்து ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து பொருளாதாரம் மீளத் தொடங்கியுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கிராமப்புற பொருளாதாரத்தில் மீட்பு வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இதற்கு ‘காரீப்’ பயிர்களின் விதைப்பில் காணப்படும் முன்னேற்றம் மற்றும் போதுமான தென்மேற்கு பருவமழை ஆகியவையும் ஊக்கமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மொத்தத்தில், விகிதங்களை நிர்ணயிப்பதுடன் மேலும் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள, ரிசர்வ் வங்கியின் இந்தக் கொள்கையானது, பொருளாதாரத்தை முன்னேற்றப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment