வளர்ச்சியை இலக்காகக் கொண்ட மத்திய நிதிநிலை அறிக்கை

ஜி.ஸ்ரீநிவாசன், மூத்த பத்திரிக்கையாளர்

தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார்

2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கை, பல வகையான உறுதியான நடைவடிக்கைகளைக் கொண்டு இந்திய பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலையை சரி செய்வதற்கான தீர்வை அளித்துள்ளது. மக்களுக்கு இன்னும் அதிக வருவாயை ஏற்படுத்திக் கொடுத்தல், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கி விவசாயத் துறைக்கு உதவுதல், வர்த்தகங்க்களுக்கு உதவ, வணிக நிறுவனங்கள் மீதான ஈவுத்தொகை வரிவிதிப்பின் நீக்கம் ஆகியவை இந்தத் தீர்வுகளில் அடங்கும்.

பொருளாதார சவால் மிகுந்த சூழலில், ஒரு நிதி நிலை அறிக்கையை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும். எனினும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் திறம்மிக்க ஒரு சமன்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளார். மூலதன செலவினங்கள் பக்கம், அரசாங்கக் கடன்களின் பெரும் பகுதி போகும் படி செய்து, அவர் செலவினங்களை போதுமான அளவு சரியாக ஒதுக்கியுள்ளார். உள்கட்டமைப்பு பணித்திட்டங்களுக்கு தான் தரும் முக்கியத்துவத்தை அரசு இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதோடு, சுகாதாரம் மற்றும் நீர் சேமிப்பு ஆகியவற்றில் மூலதன சொத்துகளை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் நலமான வாழ்வு என்ற இலக்கின் ஒரு பகுதியாக இது செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், செழுமை மற்றும் நல்வாழ்வு என்ற அடுத்த கட்ட இலக்கிற்குச் செல்ல இது வழி வகுக்கும் என்பதை இந்த பட்ஜெட் சரியாக தெளிவுபடுத்தியது.

ஐந்தாண்டுகளுக்கான, 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘தேசிய உள்கட்டமைப்பு செயல்முறை’ பணித்திட்டத்தின் கீழ், கட்டமைப்பு நிதி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க, பங்குகளுக்கென்று, இந்த நிதியாண்டில் 22,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பல்வேறு தளங்களில் உள்ள உள்கட்டமைப்புப் பணித்திட்டங்களுக்கு, மிகவும் தேவைப்படும் நீண்ட கால நிதி உதவியை அளிக்கவும் அதிகப்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.

பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளுக்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகள், எஃப்.ஆர்.பி.எம் எனப்படும் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை-யிலிருந்து விலகி இருப்பது இன்றியமையாததாக இருப்பதால், 2019-20 ஆம் ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவிகிதம் என்ற இலக்கிலிருந்து 3.8 சதவிகிதம் என்று அதிகரித்தது. இந்தியாவைப் போன்ற ஒரு துடிப்பான பொருளாதாரம், தனது வளர்ச்சிக்கான முனைப்பை குறைகக் முடியாது என்பதை, இந்த 0.5 சதவிகித அதிகரிப்பு எடுத்துக்காட்டுகிறது.

பொருளாதார பங்குதாரர்களின் விரிவான வகைகளைப் பார்த்தால், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில், புதிய திட்டங்கள், நம்பகத்தன்மைக்கான இடைவெளியை நிரப்பி, திறன் மிகு கிடங்குகள், விரைவில் அழுகும் பொருட்களுகான ஒரு லகுவான தேசிய விநியோக சங்கிலி மற்றும் அடுத்த நிதி ஆண்டிற்கு 15 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிக அளவிலான பண்ணைக் கடன்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் உதவும்.

மக்கள், வரிகளை செலுத்திய பிறகு, செலவு செய்ய போதுமான வருமானம் இருப்பதை உறுதிபடுத்த, இந்த பட்ஜெட்டில் ஒரு, எளிதான புதிய வரிவகை கொண்டுவரப்படுள்ளது. இதை பழைய வரிவகைக்கு பதிலான ஒரு மாற்றுத் தேர்வாகவும் மக்கள் பயன்படுத்தலாம். எனினும் புதிய விதிமுறையில் முன்பு இருந்த அளவிற்கு வரி விலக்குகளும் வரி நீக்கங்களும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வரி செலுத்துவோரிடம் நம்பிக்கையை உண்டுபண்ண வரிச் சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டுவர, சச்சரவில் இருக்கும் வரி நிலுவைககள் தீர்க்கப்பட வேண்டும். 2020 ஜூன் என்ற சிறிய காலம் வரை, சச்சரவில் இருக்கும் வரித் தொகை மட்டும் கட்டப்பட்டு, வரிகளும் அபராதங்களும் தள்ளுபடி செய்யப்படும். சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய்களை நிலைப்படுத்த, எளிமையான ஜி.எஸ்.டி ரிடர்ண் மற்றும் பணம் திருப்பிக் கொடுக்கும் தானியங்கி செயல்முறைகள் கொண்டு வரப்படும்.

தங்கள் முழு சாத்தியக்கூறுகளின் அளவிற்கு நிறுவனங்கள் வளர, உற்பத்தித் துறையில் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு, கடந்த செப்டெம்பரில் அறிவிக்கப்பட்ட 15 சதவிகித பெரு நிறுவன சலுகை வருமான வரி விகிதம், தற்போது எரியாற்றல் துறைக்கும் விரிவாக்கப்படும். வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான எஸ்.டயிள்யு.எஃப் எனப்படும் சோவரின் சொத்து நிதிகளுக்கு, வரிச் சலுகை அளிக்கப்படும். துவக்க நிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, லாபத்தில் 100 சதவிகிதம் வரியற்ற நிலை இருந்தது. இது, டர்ணோவர் அளவுகள் மற்றும் இதற்கான கால அளவு ஆகியவை அதிகரிக்கப்பட்டு, மேம்படுட்தப்பட்டுள்ளது. வெளி நாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு, அரசாங்க பத்திரங்களின் குறிப்பிட்ட வகைகள் துவக்கப்படும். பெரு நிறுவனங்களுக்கான பத்திரங்களுக்கான அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டின் வரம்புகள் 9-திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் சந்தையை ஆழப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களுக்கான சலுகை வரி விகிதத்திற்கும், சிக்கலற்ற சூழலை உறுதி செய்வதற்காக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தணிக்கைக்கான விற்றுமுதல் வரம்பை உயர்த்தவும் பட்ஜெட் வழிகளை வழங்கியுள்ளது.

தன்னுடைய வளர்ச்சிப் பணிகளுக்கான நிதித் திரட்டலுக்கு கூடிதல் வழிகளைக் கண்டறிவதில் அரசு நம்பிக்கையுடன் உள்ளது. அடுத்த நிதியாண்டிற்கு 2.19 லட்சம் கோடி என்ற முதலீட்டை திரும்பப்பெறும் இலக்குடன், செயலுத்தி சொத்துகளின் விற்பனை மூலம் அரசாங்கம் இதை செய்ய நினைக்கிறது. 2019-20 நிதியாண்டில் இது 65,000 கோடி ரூபாயாக இருந்தது. மொத்தத்தில், இந்த பட்ஜெட், வரி குறைப்புகள் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான முதலீடுகள் ஆகியவற்றின் ஒரு கைதேர்ந்த, வலுவான, வளர்ச்சியை அதிகப்படுத்தக்கூடிய திட்டங்களின் கலவையாக உள்ளது. அடுத்த நிதி ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட பொதுவான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 10 சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.