உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்கள்.
(மூத்த பத்திரிக்கையாளர் ஜி ஸ்ரீநிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.)
பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிக்கக்கூடிய துறைகளை முன்னிறுத்தி, மத்திய, மாநில மற்றும் தனியார்துறைகள் இணைந்து செயலாற்றக்கூடிய ஒரு மாபெரும் உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், மத்திய, மாநில தனியார் துறைகள் மூலதனச் செலவினத்தில் முறையே, 39:39:22 என்ற விகிதாச்சாரத்தில் பங்கேற்கும் உள்கட்டமைப்பு திட்டங்களில், 102 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முன்வைத்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து, உள்கட்டமைப்பிற்காக 51 லட்சம் கோடி ரூபாய் செலவினங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுச் சந்தையில் தேவைகள் மந்தமாக உள்ள நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் விரைவான வழிகளில் ஒன்று அரசின் முதலீடுகளை அதிகரிப்பதாகும். அரசின் நுகர்வுச் செலவினங்கள் மற்றும் ஏற்றுமதி ஆகியனவும் இதற்குப் புத்தாக்கம் அளிக்கும். அரசு மற்றும் மத்திய அரசுத் துறை நிறுவனங்களின் மூலதனச் செலவினங்களில் உயர்வு, மாநில மற்றும் தனியார் துறைகளின் சக்திக்கு ஏற்ப அளிக்கப்படும் பங்களிப்புடன் இணைந்து, பொருளாதார மந்த நிலையைப் போக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை. அண்மையில் சர்வதேச செலாவணி நிதியம் இந்திய அதிகாரிகளுடன் 2019 பிரிவு 4 குறித்து நடத்திய பேச்சு வார்த்தையில், அரசின் திட்டங்களின் அடிப்படையில், உள்கட்டமைப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விமான நிலையங்கள், சாலைகள், தொலைத் தொடர்பு, மின் உற்பத்தி ஆகிய துறைகளில் பெரிய முதலீடுகள் மூலம், உள்நாட்டுச் சந்தையை முடுக்கிவிட இந்தியா எடுத்த முயற்சிகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
2024-25 ஆம் ஆண்டிற்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டும் நோக்கத்துடன், சென்ற ஆண்டு சுதந்தர தின உரையில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், நவீன உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் அத்தாணு சக்ரவர்த்தி தலைமையிலான மூத்த அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு ஒன்றை உடனடியாக அமைத்து, பிரதமரின் திட்டங்களைச் செயல்படுத்தும் பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய உள்கட்டமைப்பில், 18 மாநிலங்களில் 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளது. பல மாநிலங்கள் இன்னும் இந்தத் திட்டத்திற்கான தரவுகளை அளிக்காவிட்டாலும், எந்த மாநிலமும் விடுபட்டுவிடாமல் எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கும் நோக்கத்தில், மேலும் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் இதில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பொருளாதாரச் செயல்பாடுகளை அதிகரித்து, அரசின் வருமான அமைப்பை மேம்படுத்தி, திறனுள்ள துறைகளில் செலவினங்களைப் பெருக்கவும் உதவுகிறது. இந்த அடிப்படையில் தான் தேசிய உள்கட்டமைப்புப்பாதை என்ற கொள்கை உருவாக்கப்பட்டது. உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பெருக்குதல், வர்த்தகத்தைப் பெருக்குதல், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், வாழ்க்கை முறையை எளிதாக்குதல், அனைவருக்கும் உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு சென்று சமத்துவத்தைப் பேணுதல் ஆகிய இவையெல்லாம் இந்தத் தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் பலன்களாகும்.
பாசன மற்றும் கிராமப்புற உள் கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்குத் தலா 7.7 லட்சம் கோடி, தொழில் துறை உள்கட்டமைப்புக்கு 3.7 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள தொகை வேளாண் மற்றும் சமூக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைத் திட்டங்களுக்கு ரூபாய் 19.63 லட்சம் கோடி, ரயில்வே திட்டங்களுக்கு 13.68 லட்சம் கோடி, துறைமுகத் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி, விமான நிலையங்களுக்கு 1.43 லட்சம் கோடி, நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 16.29 லட்சம் கோடி, தொலைத் தொடர்பு, எக்ஸ்பிரஸ் வழித்தடங்கள், தேசிய எரிவாயு க்ரிட், பிரதம மந்திரி கிராம வீட்டு வசதி ஆகிய திட்டங்களுக்கு 3.2 லட்சம் கோடி என, உள்கட்டமைப்பு செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புப் பணிக்குழுவின் கீழுள்ள பல்வேறு குழுக்களின் சீர்திருத்தப் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்பது ஒரு மன நிறைவு தரும் விஷயம். இதன் மூலம், தேசிய உள்கட்டமைப்புப் பாதைத் திட்டத்தின் பட்டியலிடப்பட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்படும். அரசு-தனியார் பங்குதார ஒப்பந்தங்களில் சீர்திருத்தம், ஒப்பந்தங்களுக்குக் கட்டாய செயலாக்கம், சர்ச்சைகள் தீர்வுக்கான நடைமுறையை நெறிப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். ஒரு வலுவான மேற்பார்வை நடைமுறையும் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தங்கு தடையின்றி இந்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

Comments
Post a Comment