இருதரப்பு உறவுகளுக்கு ஊக்கமளிக்கும் ஜெர்மன் அதிபரின் இந்தியப் பயணம்.
(ஜேஎன்யூ வின் ஐரோப்பிய மையத் தலைவர் பேராசிரியர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கெல் அவர்கள், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடன் கூட்டாக இணைந்து, இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குக் தலைமை தாங்கினார். ஜெர்மனி உயர்ந்த நிலையிலான ஈடுபாடுகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. ஜெர்மன் அதிபரின் இந்த இந்தியப் பயணம், அவரது நான்காவது பயணமாகும். அவருடன் 12 அமைச்சர்களும், பெரும் வர்த்தகக் குழுவும் பயணித்தன. ஜெர்மன் அதிபர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்தார். ஐரோப்பிய யூனியனுடனான, பரந்த, சமநிலையிலான ஐரோப்பிய யூனியன் – இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய, ஜெர்மனியின் ஆதரவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளிலேயே, இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் புரியும் கூட்டாளி நாடாக ஜெர்மனி விளங்குகிறது. இரு நாடுகளும் இணைந்து, உலகில் பல்நிலை வர்த்தகத்திற்கும் பல்துருவ உலகக் கட்டமைப்புக்கும் வலுசேர்க்கப் பணி புரிய வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், பயங்கரவாத நிதித் தடுப்புப் பணிக்குழுவின் கூட்டங்களில் தங்கள் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் அவர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment