இம்ரான்கானின் ஓராண்டு ஆட்சி – கொண்டாட்டங்களும் போராட்டங்களும்.
(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
பாகிஸ்தானில் கடந்த வாரம் இம்ரான்கான் அவர்களின் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்தது. மக்களுக்கு நன்றி செலுத்தும் தினமாக பாக் அரசு கொண்டாடிய அதே வேளையில், ஜூலை மாதம் 25 ஆம் தேதி பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிகவும் கறுப்பான தினம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் பெருமளவில் போராட்டத்தில் இறங்கினர். பிஎம்எல்(என்), பிபிபி, ஜேஈஎல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, லாகூர், கராச்சி, குவெட்டா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மரியம் நவாஸ், பிலாவல் புட்டோ சர்தாரி, மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பாக் அரசைக் குற்றம் சாட்டினர். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தியும், ஊடகங்களின் குரல்வளையை நெறித்தும், பொருளாதார அழிவையும், திவால்நிலையையும் நோக்கி நாட்டை செலுத்தியும், பிராந்திய உணர்வுகளைத் தீவிரப்படுத்தியும், அமெரிக்காவின் ஆணைகளைக்குக் கட்டுப்பட்டும் அரசு செயல்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆகஸ்டு மாதத்துக்குள் இம்ரான்கான் அரசு ராஜினாமா செய்யாவிடில், நாடே பொங்கியெழுந்து, இஸ்லாமாபாத்தை நோக்கி அணிவகுத்து அரசை சரணடையச் செய்யும் என்று, மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மான் கெடு விதித்து எச்சரிக்கை செய்தார்.
முன்னதாக, பேரணிகள், போராட்டங்கள் வாயிலாக, நவாஸ் அரசை இம்ரான்கான் கவிழச் செய்தது நினைவிருக்கலாம். அவரது போராட்ட அணிவகுப்புக்கள், இஸ்லாமாபத்தை நோக்கிய நீண்ட அணிவகுப்பில் முடிந்ததோடு, நான்குமாத காலமான, பகலிரவு முழுவதுமான முற்றுகையின் மூலம் இஸ்லாமாபாத்தை ஸ்தம்பிக்க வைக்கும் விதத்திலும் அமைந்திருந்தது. இம்ரான்கான் பின்பற்றிய அதே வழியைத் தற்போது எதிர்க்கட்சிகள் பின்பற்றி, இம்ரான்கான் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

Comments
Post a Comment