தென்சீனக் கடலில் புரையோடும் இறுக்கங்கள்.
(கிழக்காசிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் சனா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)
தென்சீனக் கடல் பகுதியில் கொந்தளிக்கும் நீர் போலவே, அங்கு அதிகரித்து வரும் இறுக்கங்கள் காரணமாக, இப்பகுதி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பாங்காக்கில் நடக்கும் ஒன்பதாவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில், தென்சீனக் கடல் சார்ந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றே தெரிகிறது. இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்ஷங்கர் அவர்கள் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில், இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில், ஹய்யாங்க் டிஸி 8 என்ற சீன ஆய்வுக் கப்பல், இரண்டு சீன கடலோரக் காவல்படைக் கப்பல்களுடன், வியட்னாமின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்கு 200 நாடிகல் மைல் தூரத்திற்குள், கடல்சார் நில அதிர்வு ஆய்வை நடத்தியது. இதனால், இந்தப் பகுதி முழுவதும், குறிப்பாக, ஹனோயில் பதட்டம் ஏற்பட்டது.
சீனா, தாய்வான், புரூனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம் போன்ற முக்கிய தென்கிழக்காசிய நாடுகள் தென்சீனக் கடலில், ஒரே பகுதிக்கு உரிமை கோரி வருகின்றன.. இது, சீனாவை மையமாகக் கொண்டு, எல்லை குறித்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நீண்ட கடல் எல்லையாகும்.
தென்சீனக் கடலைப் பொறுத்தவரை, சீனா இதுவரை நடந்துகொண்ட விதம், சீனா தனது உரிமைக்கோரல்களை விட்டுக்கொடுத்து, இதில் தொடர்புடைய மற்ற நாடுகளுக்கு சலுகைகள் வழங்கும் எண்ணத்தில் கண்டிப்பாக இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் தலைமையிலான பிலிப்பைன்ஸ் நாடு, தனது உரிமைக்கோரல்களில் அசைந்து கொடுக்க முன்வந்தாலும், தனது கடல் எல்லையைப் பொறுத்த தென்சீனக் கடல் விவகாரத்தில், வியட்னாம் இன்னும் உறுதியாகத்தான் உள்ளது. தென்சீனக் கடலின் முக்கியத்துவம் இதன் மூலம் விளங்குகின்றது. இப்பகுதி இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. 1100 கோடி பேரல் எண்ணெயும் 190 லட்சம் கோடி கியூபிக் ஃபீட் இயற்கை எரிவாயுவும் இதன் கடல் அடியில் இருக்கிறது. கடல்வழித் தொடர்பிற்கான முக்கியக் கடல் பகுதியாக இருப்பதோடு, சீனாவின் 80 சதவிகித எண்ணெய் இறக்குமதி தென் சீனக்கடல் வாயிலாகத்தான் நடைபெறுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பொறுமை காத்துவிட்டு, வியட்னாம், தான் முன்பு செய்ததைப் போல, இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகளுக்கு இடையில் கொண்டு வந்துள்ளது. இம்முறை வியட்னாம் இந்தப் பிரச்சனையில் சர்வதேச ஆதரவை நாடியள்ளது. நாற்கர பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளின் கீழ் எடுக்கப்படும் அதிக அளவு முயற்சிகளுக்கும் வியட்னாம் ஆதரவை அதிகப்படுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியா ஈடுபடவும் இல்லை. எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்கவுமில்லை. எனினும், தென்சீனக் கடலில் இந்தியாவுக்குக் குறிப்பிடத்தக்க பங்குகள் உள்ளன. இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி-யின் வர்த்தகப் பங்குகளின் காரணமாக தென்சீனக் கடல் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கிறது. தடையற்ற போக்குவரத்தையும், இந்தப் பகுதிகள் மீதான விமானப் போக்குவரத்தையும் பாதுகாப்பது, சர்வதேச சட்டங்களின்படி, குறிப்பாக, ஐ.நா-வின் 1982 ஆம் ஆண்டின் கடல் சட்டம் பற்றிய மாநாட்டின் படி, சர்வதேசக் கடல் பகுதிகளில் சட்டத்திற்குட்பட்ட தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்தல் ஆகியவையே இந்த விஷயத்தில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டாகும்.
தென்கிழக்காசியப் பகுதிகளில் இந்தியாவின் அதிகரிக்கும் ஆர்வத்தை வியட்னாம் எப்போதுமே வரவேற்றுள்ளது. இந்தியாவும் வியட்னாமும் சுமுகமான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவை வியட்னாம் ஒரு நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கின்றது. வியட்னாமுடன் முழுமையான செயலுத்திக் கூட்டாளித்துவத்தைக் கொண்டிருக்கும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இரு நாடுகளுக்கும் இடையில் உயர் மட்ட அரசியல் நம்பகத்தன்மை உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில், இந்தியா ஒரு பொறுப்பான நாடாகக் கருதப்படுவதோடு, ஆசியான் தலைமையிலான கிழக்காசிய உச்சிமாநாடு, ஆசியான் பிராந்திய மன்றம் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியாவின் அதீத உயர்வையும், வியட்னாம் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் திடமான உறவுகளையும் வைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய மிக முக்கிய கடல் தொடர்புகளைக் காக்க, வியட்னாம் இந்தியாவை நாடுவது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.
சீனாவுடன் பலதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்னர் பிலிப்பைன்சும் வியட்னாமும் இருந்தன. எனினும், தற்போது சீனா விரும்புவதைப் போல இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவும் வியட்னாமும் செயலுத்திக் கூட்டாளிகளாக இருந்தாலும், சீனாவுடனான தன்னுடைய உறவுகளிலும் இந்தியா நேர்மறையான அணுகுமுறையையே கொண்டுள்ளது. ஆசியானின் மையத்தன்மையின் முக்கியத்துவத்தை இந்தியா எப்போதும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. தென்சீனக் கடல் தொடர்பான சி.ஓ.சி எனப்படும் நடத்தை விதி விரைவாக கையெழுத்திடப் பட வேண்டும் என்பதையும் இந்தியா வலியுறுத்துகிறது. அனைத்து நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. சி.ஓ.சி சட்டப்பூர்வமாக அத்தனை பிடிப்பில்லாத ஆவணமாக இருந்தாலும், சீனா மற்றும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையில் இது ஒரு நம்பிக்கைக்கான நடவடிக்கையாக இருக்கும். ஐ.நா-வின் – யு.என்.சி.எல்.ஓ.எஸ், அதாவது, கடல் சட்டம் பற்றிய விதிக்கு அனைத்து நாடுகளும் கட்டுப்படவும் இது வித்திடும்.

Comments
Post a Comment