உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட்.
(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த சிறப்புப் பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
அடுத்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டத்தக்க வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், அதிகப்படியாக உள்கட்டமைப்பை நம்பியுள்ளது. இதற்குச் சான்றாக, அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். நாட்டைச் சுற்றி, மாலை போல், சாலை, எரிவாயு, தண்ணீர் மற்றும் விமான நிலையக் கட்டமைப்புக்கள், “ஒரு நாடு ஒரு கட்டமைப்பு” என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் தரத்தை வெகுவாக மாற்றும்.
முதல், முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை உயர்த்த, சரியான வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் முதலாவது ஆட்சிக் காலத்தின் போதே, உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சாலை, துறைமுகம் மற்றும் ரயில்வேத் துறைகளில் கொள்திறன் விரிவாக்கப்பட்டது. தவிர, உள்கட்டமைப்புத் துறை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலநாள் செயல் வடிவம் பெறாமல் இருந்த உள்கட்டமைப்புத் திட்டங்களை செயலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. தற்போது திருப்திகரமான, ஆரோக்கியமான நிலையை எட்டியுள்ள உள்கட்டமைப்பை வெகுவாக மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது மிகச் சரியானதே.
2018 ஆம் ஆண்டு முதல், 2030 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரயில்வேத் துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. ரயில்வே, தேசிய அளவிலான போக்குவரத்து வசதியாக விளங்குவது மட்டுமல்லாது, நாட்டின் உயிர்நாடியாகவும் திகழ்கிறது. கடந்த காலத்தில், சாலைகள் துறையில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு ஒப்ப, ரயில்வேயில் முதலீடுகள் செய்யப்படாதது ஒரு குறைபாடாக இருந்தது. இதனால், சாலைகளை நோக்கி, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் கவனம் திசை திரும்பியது. மலிவானதாகவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் விளங்கும் ரயில்வேத் துறையில், முதலீடுகளை அதிகரிப்பது மிகவும் அவசியமாகிறது. ரயில்வேத்துறையில் நிலுவையிலுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க, பொது – தனியார் கூட்டாளித்துவ வழிமுறையைக் கையிலெடுக்க முடிவு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. வேகமாக நகரமயமாக்கல் நிகழ்ந்துவரும் இவ்வேளையில், தில்லி – மீரட் ஆகிய நகரங்களுக்கிடையிலான அதிவிரைவு, பிராந்தியப் போக்குவரத்து அமைப்பைப் போன்ற, புறநகர ரயில்வேத் திட்டங்களின் மேல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகளில் வாழும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளை, 657 கி.மீ. தூர மெட்ரோ வழித்தடம் பூர்த்தி செய்வது, திருப்தியளிக்கக் கூடியது.
கிழக்கு, மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடங்களை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம், பயணிகளுக்கான இருப்புப் பாதை கொள்திறன் அதிகரிக்கும் என்பதால் அது இந்த பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை விரைவில் நவீனப்படுத்துவதற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்புக்குத் தேவையான 100 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதற்கு அனைத்து வழிகளையும் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன் உத்தரவாத மேம்பாட்டுக் கழகத்தை நிறுவும் திட்டம், சரியான பாதையில் எடுக்கப்படும் முன்னெடுப்பாகும்.
பாரத் மாலா, சாகர் மாலா, ஜல் மார்க் விகாஸ் மற்றும் உடான் திட்டங்கள் சார்ந்த தொழிலக வழித்தடத்தில், திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகள், நீர்வழித்தடம், ரயில்வே, மின்சாரம் மற்றும் விமானப் போக்குவரத்துக்குத் தேவையான நிதி ஆதரவை அளிப்பது, “ஒரு நாடு ஒரு கட்டமைப்பு” என்ற கொள்கைக்கு உறுதுணையாக விளங்கும் என்பது தெளிவு. இந்தியாவின் அபிரிமித நீர்வழித்தடங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம், மலிவான சரக்குப் போக்குவரத்து கைகூடும் என்பதற்கு அடையாளமாக, வாரனாசி – ஹால்தியா நீர் வழித்தடம் விளங்குகிறது. சாகர்மாலா திட்டத்தைக் கையிலெடுத்து, ஏற்றுமதிக்கு உதவும் வகையில் மலிவான போக்குவரத்தை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய துறைமுகங்கள், பழைய துறைமுகங்களின் விரிவாக்கம் மற்றும் அவை சார்ந்த நகர்ப்புறங்கள் நிர்மாணம் ஆகியவற்றின் மூலம், சாகர்மாலா திட்டம், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும். மேலும், ஏற்றுமதித்துறை, வேலைவாய்ப்புக்களைப் பெருக்கும்.
விமானங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புக்களை சரிவரப் பயன்படுத்தி, உலகின் விமானப் போக்குவரத்து மையமாக இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான கொள்கை ரீதியிலான வழிகாட்டுதல் இந்த பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. பாரத்மாலா திட்டத்தின் இரண்டாவது பகுதியில், 48,000 கி.மீ, தூரத்துக்கு சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாரத்மாலா திட்டத்தை செயல்படுத்த, நிலம் கையகப்படுத்த, மாநிலங்களுக்கு உதவுவது என்று, மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதனால் நிலம் கையகப்படுத்துதல் விரைவுபடுத்தப்படுவது உறுதி. நாட்டில், 97 சதவிகித வசிப்பிடங்கள், அனைத்துப் பருவநிலைகளையும் தாங்கக்கூடிய வகையில் இணைக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. பிரதான் மந்திரி சடக் யோஜனா திட்டம், ஊரகப் பகுதிகளை நகர்ப்புறத்துடன் இணைப்பதில், குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி கண்டுள்ளது. விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், ஊரகப் பகுதியில் சாலைகளை மேம்படுத்த, இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பில் இடப்படும் முதலீடுகள், பொருளாதாரத்தைப் பல்கிப் பெருக ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆண்டுதோறும், உள்கட்டமைப்பில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் செலவு செய்ய இந்த பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்றால் அது மிகையல்ல.

Comments
Post a Comment