நாடாளுமன்றத்தில்  கடந்த வாரம்

பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்  சத்யா அசோகன்

சர்வதேச எல்லைக்கருகே வாழ்பவர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்காக மக்களவையில் வைக்கப்பட்ட ஜம்மு கஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா உட்பட பல மசோதாக்கள் 17வது மக்களவையின் நடப்பு முதல் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.  ஜம்மு கஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மக்களவையும் மாநிலங்களவையும் ஏற்றுகொண்டன.  ஜம்மு கஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2004ஐ திருத்துவது குறித்த முடிவும்  ஏற்றுகொள்ளபட்டு மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டிருந்தது.  தற்போது ஜே&கே இட ஒதுக்கீடு சட்டம் சர்வதேச எல்லையில் மட்டுமல்லாமல்,    மாநில எல்லைபுறங்களுக்கு அருகே வசிப்போருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3 சதவிகித இடஒதுக்கீட்டை ஏற்றுகொண்டுள்ளது.   விவாதத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா  இந்தச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு 4 சதவிகித ஒதுக்கீடு செய்வதற்கு அரசு பரிசீலித்து வருகிறது என்று கூறினார்.  மோடி அரசானது ஜம்மு கஷ்மீர் குழப்ப நிலைக்குத்   தீர்வு காண முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியின் இன்சானியத், ஜமூரியத், கஷ்மீரியத் கோட்பாட்டைப் பின்பற்றி வருவதாக அவர் கூறினார்.
பயங்கரவாதத்தை அறவே சகிப்பதில்லை என்ற அரசின் கொள்கையை திரு ஷா மீண்டும் வலியுறுத்தினார்.  இந்தக் கொள்கையானது களத்தில் பலன் களை கட்டத்  துவங்கியுள்ளது.  பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்துவதன் மூலம் மத்திய அரசானது, ஜமூரியத்திற்கான உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக உழைத்து வருவதாக உள்துறை அமைச்சர் கூறினார்.  தனி பிரிவாக லடாக்கை உருவாக்கி,  மலை சபைக்கு அதிக அதிகாரங்கள் அளித்திருப்பதை, அரசானது ஜன நாயகத்தை வலுப்படுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்று அவர் சுட்டி காட்டினார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், பட்டியல் சாதியினர், பழங்குடியினர்,  பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு ஆசிரியர் பதவியில் இட ஓதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்திற்கு மாற்றாக வரவிருக்கும் மசோதாவைக் கட்சிப் பாகுபாடின்றி மாநிலங்களவை ஆதரித்தது. 41 மத்திய பல்கலைகழகங்களில்   இருக்கும் 8000 காலியிடங்களை நிரப்ப வழி வகுக்கும் மற்றும் பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியிருப்போருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வழி வகுக்கும்  மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணி நிலையில் இட ஒதுக்கீடு) மசோதா 2019 இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பல் மருத்துவர்கள் சட்ட திருத்த மசோதா 2019ஐயும் மக்களவை ஏற்றுகொண்டது.  தற்போது உள்ள சட்டத்தின் படி இந்திய பல் மருத்துவ கவுன்சில்களில் பிரிவு பியில் பதிவு செய்த பல் மருத்துவர்கள் பிரதினிதித்துவம் இருக்கவேண்டுமென்பது  அவசியமாகிறது.  அதே போல மானில, இணை மானில பல் மருத்துவ கவுன்சிலில் முறையே 4,2 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் இவர்களது பிரதிநிதித்துவம் குறித்த பிரிவுகள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதைக் குறைப்பதற்காக மத்திய அரசு இந்தப் பிரிவுகளை நீக்க முடிவு செய்துள்ளது.  கட்டாயம் என்ற வார்த்தையை நீக்குவது இந்த திருத்த மசோதாவின் நோக்கம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கூறியுள்ளார்.  அரசானது மருத்துவக் கல்வித் துறையில் விரிவான சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்காக வெகு விரைவில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் தயார்படுத்தி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மக்களவையில் கூறினார்.
இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதா 2019 -ன் மீது நடந்த விவாதத்திற்கு அமைச்சர் பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.  பின்னர் அந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலமாக அவையில் நிறைவேற்றப்பட்டது.  செப்டம்பர் 26, 2018 முதல் இரண்டு ஆண்டு காலத்துக்கு   இந்திய மருத்துவ  கவுன்சிலுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு மருத்துவக் கல்வியை நிர்வகிக்க இந்த மசோதா வழி வகுக்கிறது.  ஃபிப்ரவரி 21ஆம் தேதி இயற்றப்பட்ட அவசரச் சட்டத்தை மாற்றாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு சுதந்தரமான தன்னாட்சியுடைய நிறுவனமயமாக்கப்பட்ட உள் நாட்டு மற்றும் சர்வதேச நடுவாண்மை  அமைப்பதற்காக மசோதா ஒன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.   புது தில்லி சர்வதேச நடுவாண்மை மைய மசோதா 2019 முந்தைய அரசால் இந்த ஆண்டு மார்ச் மாதம் இயற்றப்பட்ட அவசர சட்டத்தை மாற்றாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நிறுவன நடுவாண்மைக்காக சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு ஒன்றை அமைக்க இந்த மசோதா வழி வகுக்கும்.

பெரு  நிறுவன விவகாரம் மற்றும் நிதித் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஜூலை 4ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் 2018-19-க்கான பொருளாதார ஆய்வு ஆவணத்தைத் தாக்கல் செய்தார். 2019-20ஆம் ஆண்டானது அரசுக்கு மிகபெரும் அரசியல் அதிகாரத்தை வழங்கியுள்ளது என்பதையும்,  உயர் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை இது வழங்கக்கூடும் என்பதும் மிகத் தெளிவாகப் பொருளாதார ஆய்வில் கூறப்பட்டுள்ளது.    2019-20-ல் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது.  வெள்ளிகிழமையன்று நிதியமைச்சர் திருமதி சீதாராமன் மோதி 2.0 அரசின் முதல் நிதி நிலை அறிக்கையை அவையில் தாக்கல் செய்தார்.  தைரியமாக பெரிய அளவில் எடுக்கப்பட்டிருக்கும் கொள்கை முயற்சிகள் நிச்சயமாக நாட்டைப் பெரும் வளர்ச்சிப் பாதையில் இட்டு செல்லும்.

Comments