முதலீட்டாளர்களை ஈர்த்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும் மத்திய பட்ஜெட் தாக்கல்.
(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. குருமுர்த்தி.)
மோதி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்தார். வர்த்தகம் புரிவதை எளிதாக்க நடைமுறைகளை எளிதாக்கும் பட்ஜெட்டாக இது விளங்கும் என்ற எதிர்பார்ப்புக்களை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது. நாடு முழுவதிலும் மக்கள் வாழ்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பொருளாதாரத்தை அதிக அளவில் மின்னணு மயமாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம், நடப்பாண்டிலேயே, 3 லட்சம் கோடி டாலர் அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு இட்டுச் செல்லும் வகையில், அதற்கான வரைவுத் திட்டத்தின் முன்னோடியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதற்கு பெரிதும் உதவுவது முதலீடுகளே. இதுவரை நடைமுறையிலிருந்த அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு, அனைவரையும் உள்ளடக்கி, ஒவ்வொரு குடிமகனுக்கும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
வளர்ச்சிக்கும், ஏழை, எளியவர்களின் நல்வாழ்விற்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த பட்ஜெட், தனியார் துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பு உரிமையுள்ளோருடனும் அர்த்தமுள்ள கூட்டாளித்துவத்தை மேற்கொண்டு செல்வ வளத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக விளங்குகிறது. செல்வ வளம் பெருகாதவரை, உண்மையான வளர்ச்சியும், குடிமக்கள் நலனும் நீடித்திருக்க முடியாது. எனவே, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெருநிறுவனங்களுக்கான வரியும், 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரே முன்னெடுப்பின்கீழ், 99.3 சதவிகித நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால், உள்நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும்.`தனியார் துறையில் அதிகரிக்கும் முதலீடுகளால், சந்தையில் தேவைகளும், உற்பத்தித்திறனும் கூடும். தொழிலாளர்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகள் பெருகும்.
உள்கட்டமைப்பு மற்றும் நீர்வழிகள், ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்ற போக்குவரத்து இணைப்பு வசதிகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் தனியார் துறையினரின் முதலீடுகள் வரவேற்கப்பட்டுள்ளன. இதனால் கட்டமைப்புகளில் பெருமளவில் மாற்றங்கள் உருவாகும். பலதுறைகளிலும், உற்பத்தித்திறன் நீடித்து நிலைக்கும். அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் உள்கட்டமைப்பு கடன் நிதிகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். உள்கட்டமைப்புத் துறையில் வாராக்கடன்களைப் பரிமாறிக் கொள்ளுதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. , பெருநிறுவன பத்திரங்கள் விரிவாக்கம், பங்குச் சந்தையில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடு ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளன.
வங்கித்துறைக்கு, கூடுதலாக 70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாராக்கடனில் தத்தளிக்கும் உள்நாட்டு வங்கித்துறை இதனால் பயனடையும். வங்கிகள், கடன் அளிப்பதை அதிகரிப்பதன் மூலம், தொழில் வேகம் சூடு பிடிக்கும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம், ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி நிதி திரட்டப்படும்.
உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்தைக் கொண்ட இந்தியாவில், விமானப் போக்குவரத்துத் துறையில் அன்னிய நேரடி முதலீடுகளை மேலும் வரவேற்பது குறித்த பரிந்துரைகளைப் பரிசீலிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஊடகத்துறையிலும் அன்னிய நேரடி முதலீடுகளை மேலும் வரவேற்பது பரிசீலிக்கப்படும். காப்பீட்டு இடைநிலை நிறுவனங்களில், 100 சதவிகித அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரு பிராண்டு சில்லறை வணிகத்தில் செய்யப்படும் அன்னிய நேரடி முதலீடுகளில், உள்ளூரில் கொள்முதல் செய்வதற்கான விதிகளைத் தளர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்குக் குறைந்த விலையில் நுகர்வுப் பொருட்கள் கிடைக்க வழி பிறக்கும். மனை வணிகம், போக்குவரத்து ஆகிய துறைகளில் அதிகமாக ஈடுபட்டுள்ள வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மீது இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்களின் பணப்புழக்கம் மற்றும் கடன் தீர்வுத் திறம் குறித்த விஷயங்கள் கவனிக்கப்படும்.
உலகிலேயே மிகக்குறைந்த அளவாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அன்னியக் கடனின் பங்கு, 5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள நிலையில், அன்னியக் கடனை அதிகரிக்கும் உத்தேசத்தை இந்தியா அறிவித்துள்ளது. 2 முதல் 5 கோடி வரையிலான வருமானமுள்ள
பெரும் பணக்காரர்களுக்குக் கூடுதல் வருமான வரி 3 சதமும், 5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு கூடுதல் வருமான வரி 7 சதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம், சில தொழிலகப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ஊக்கமடையும். நுட்பமான, நிதிநலனைப் பேணும் இந்த பட்ஜெட், வளர்ச்சியை உக்குவிக்கும் பட்ஜெட்டாக விளங்கும் என்றால் அது மிகையல்ல.

Comments
Post a Comment