பயங்கரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தானின் மேற்போக்கான நடவடிக்கைகள்
(அரசியல் விமர்சகர் அஷோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)
1997 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்தைக் கொண்டு, இந்த வாரம், பாகிஸ்தான், 23 முதல் தகவல் அறிக்கைகளைத் தாக்கல் செய்தது. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி அளித்த குற்றத்திற்காக, லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைவனான ஹஃபிஸ் சயித் உட்பட, லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் அதன் மற்றொரு அமைப்பான ஜமாத்-உத்-தாவா ஆகிய இயக்கங்களிலுள்ள சுமார் 12 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சயித்திற்குப் பிறகு இரண்டாம் இடத்தில் இருக்கும் அப்துல் ரஹ்மான் மக்கி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்-உத்-தாவா மற்றும் ஃபலாஹ்-இ-இன்சானியத் ஆகிய அமைப்புகளைத் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் பயன்படுத்தி, அவற்றின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள, பஞ்சாப் அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை மூலம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரிவான விசாரணைக்குப் பிறகு, இன்னும் ஐந்து அறக்கட்டளைகள் மூலமும் நிதி சேகரித்து, அவற்றை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகக் கை மாற்றி விடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஈட்டிய தொகையை, இந்த அமைப்புகள் அதிக அளவில் சொத்துகளை வாங்க பயன்படுத்தியுள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹஃபிஸ் சயித், 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரி ஆவான். இதில் 164 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நடந்த இன்னும் பல தாக்குதல்களுக்கும் இந்த ஹஃபிஸ் சயித் காரணமாக இருக்கிறான்.
பாகிஸ்தான் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றபோதிலும், சில கேள்விகளும் எழும்புகின்றன. ஹஃபிஸ் சயித்தும் அவனது பெயரளவிலான நன்கொடை அமைப்புகளும், இப்படிப்பட்ட தகாத செயல்களை, கடந்த சுமார் 30 ஆண்டுகளாக செய்து வருகின்றன. இப்போது அது உண்மைதான் என பாகிஸ்தான் ஒப்புக்கொள்வதில் பாராட்ட ஒன்றும் இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உலகறிந்த இந்த உண்மையைக் கண்டறிய பாகிஸ்தான் ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமா என்பதே கேள்விக்குரிய விஷயம்தான். நேர்மையான நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும் கூட, பாகிஸ்தான் அரசாங்கம் இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுக்க இத்தனைக் காலங்களை ஏன் எடுத்துக்கொண்டது என்ற கேள்வியே மீண்டும் எழுகிறது.
கேள்விகளுக்கான விடைகளும் தெளிவாகவே இருக்கின்றன. பாகிஸ்தான், இத்தனைக் காலமாக, தங்கள் மண்ணில் இயங்கிக்கொண்டிருக்கும் பயங்கரவாதிகளையும் பயங்கரவாத இயக்கங்களையும், மற்ற நாடுகள் மீது தாக்குதல்களை நடத்த ஒரு செயலுத்தி ஆயுதமாகக் கருதி உபயோகித்து வந்தது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷரஃப், நாட்டின் முக்கிய சொத்தாக, பாகிஸ்தானே இந்த பயங்கரவாதிகளை உருவாக்கி வளர்த்து வருகிறது எனக் கூறியுள்ளார். இந்தியாவில் காஷ்மீர் மற்றும் மற்ற இடங்களிலும், உலகின் மற்ற நாடுகளிலும் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் இந்த பயங்கரவாத இயக்கங்களை உபயோகித்து வருகின்றது. இது பற்றி எதுவும் தெரியாதது போல் பாகிஸ்தான் நடிப்பது, தனது தவறுகளை மூடி மறைக்கவே என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது. இந்த அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்ய பாகிஸ்தான் ஏன் இத்தனை காலம் தாமதித்தது என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றது.
பாகிஸ்தான் தற்போது உள் நாட்டிலும், நாட்டின் வெளியிலும் பெரும் சிக்கலான சூழலில் சிக்கிக்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை. கடுமையான சர்வதேச இறுக்கம் அந்நாட்டின் மீதுள்ளது. தனது நாட்டிலும், கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அரசின் தினசரி செலவுகளுக்கே போதிய நிதி இல்லாத நிலை அங்குள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை வானை எட்டியுள்ளது. இதன் விளைவால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்து திடமான நடவடிக்கை எடுக்காத வரை, பாகிஸ்தானிற்கு வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதில் உலக நாடுகள் தெளிவாக உள்ளன. சமீபத்தில், ஜப்பானின் ஒசாகாவில் நடந்த ஜி-20 சந்திப்பிலும் இது தெளிவாக்கப்பட்டது.
பயங்கரவாத இயக்கங்களுக்கான நிதி உதவியின் கண்காணிப்பு அமைப்பான எஃப்.ஏ.டி.எஃப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பாகிஸ்தானை தொடர்ந்து சாம்பல் பட்டியலில் வைத்ததோடு, பயங்கரவாத நிதி உதவிக்கு எதிராக பாகிஸ்தான் போதுமான நடவடிக்கை எடுக்காவிடில், பட்டியலில் அந்நாட்டை இன்னும் கீழிறக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் நடந்த அந்த அமைப்பின் சந்திப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் எடுத்துள்ள காலம் கடந்த நடவடிக்கையும் பலரால் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றது. ஏனெனில், பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராகத் தான் நடவடிக்கை எடுப்பது போன்ற ஒரு காட்சியை பாகிஸ்தான் பல முறை உலக மேடையில் அரங்கேற்றியுள்ளது. ஆனால், இவை முழு முனைப்புடன் செயல்பாட்டிற்கு வந்ததில்லை என்பதே உண்மை. உலகக் கருத்தை வேறு பாதைக்கு மாற்றி விடும் கண்துடைப்பாகவே இவை இருந்துள்ளன. இம்முறை, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது இயக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முடிவு, ராணுவம் மற்றும் சிவில் அரசாங்கம் என இரு தரப்பும் இணைந்து எடுத்துள்ளதால், சிறிது நம்பிக்கை பிறக்கின்றது. இதனால், இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதை ராணுவம் தடுக்க வாய்ப்பில்லை. எனினும், இது நடக்கின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தனது நாட்டின் நன்மைக்காகவும், உலக நாடுகளின் நன்மைக்காகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக முழு முனைப்புடன், உண்மையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பமாக உள்ளது.
ஹஃபிஸ் சயித் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை, ‘மேற்போக்கான நடவடிக்கை’ என்றும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் அரைகுறை நடவடிக்கை என்றும் இந்தியா கூறியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் பயங்கரவாதக் குழுக்கள் மீது நிரூபிக்கக்கூடிய, நம்பகமான, மாற்றமுடியாத, நிலையான நடவடிக்கைகளைத் தங்களால் எடுக்க முடியும் என பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும். இந்த அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தானிற்கு உள்ள முனைப்பையும், உண்மையான உறுதியையும் அப்போதுதான் நம்ப முடியும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment