ஒசாகாவில் ஜி-20 உச்சிமாநாடு.

(கிழக்கு, தென் கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
ஒசாகா நகரில், ஜி-20 உச்சிமாநாட்டை ஜப்பான் தலைமையேற்று நடத்தியது. உலகப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் பங்களிக்கும் ஜி-20 நாடுகள் குழு, உலகப் பொருளாதார நிர்வாகத்தை அலசும் முக்கிய மன்றமாகத் திகழ்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வண்ணம், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக நெருக்கடிகள் அதிகரித்துவரும் சூழலில், ஒசாகா உச்சிமாநாட்டில், பல்நிலை வர்த்தக அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டுவது, முன்னுரிமை அளிக்கப்பட்ட விஷயமாக விளங்கியது. வளர்ந்த, வளரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
சுதந்திரமான, நியாயமான, வேற்றுமை பாராட்டாத, வெளிப்படையான, நம்பகமான, யூகிக்கக்கூடிய, ஸ்திரமான வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வலியுறுத்தும் ஒசாகா பிரகடனம், உச்சிமாநாட்டின் முடிவில் அங்கீகரிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரும் பல்நிலை வர்த்தக அமைப்பான உலக வர்த்தக அமைப்பு சீரமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்ப்பாயக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வதை அமெரிக்கா தொடர்ந்து தடுத்து வருவதால் வலுவிழந்து வரும் தீர்ப்பாய அமைப்பின் பணிகள் தொடர்பாக, உறுப்பு நாடுகள் தீர்மானித்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒசாகா பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.