புதிய சிகரத்தை எட்டவிருக்கும் இந்தியப் பொருளாதாரம்.
(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)
இந்தியா, இவ்வாண்டு இங்கிலாந்தை முந்திச்சென்று, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என கணிக்கப்படுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள், ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா ஆசியா-பசிஃபிக் பகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. பிரதமர் திரு நரேந்திர மோதி பற்றியும், தேசியத் தேர்தல்களில் அவரது கட்சிக்குக் கிடைத்த அபார வெற்றி பற்றியும் வெளிவந்துள்ள, லண்டனைச் சார்ந்த ‘ஐ.ஹெச்.எஸ் மார்கிட்’ என்ற ஏஜன்சியின் அறிக்கை, மோதி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில், நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டம் நேர்மறையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. 2019-2023 ஆம் ஆண்டுகளுக்கான கால அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 7 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
‘2019 ஆம் ஆண்டு, இந்தியா உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 3 லட்சம் கோடி டாலர் என்ற அளவை விட அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை இந்தியா எட்டி, இங்கிலாந்தைக் கடந்து செல்லும். 2025 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு, ஜப்பானை விட அதிகமாக இருக்கும் என எதிரார்க்கப்படுகின்றது. இது இந்தியாவை ஆசியா-பசிஃபிக் பகுதிகளில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்த்தும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், உலக ஜிடிபி வளர்ச்சியிலும் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும். ஆசியா-பசிஃபிக் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியின் முன்னோடிகளில் ஒன்றாக, இந்தியா ஒரு முக்கியப் பங்கையும் வகிக்கும். ஆசிய பிராந்திய வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பெருக்கவும் இந்தியா உதவும்.
மோதி அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தில், முக்கியப் பொருளாதார சவால்களை இந்தியா தொடர்ந்து எதிர்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ‘பொதுத் துறை வங்கிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், அவற்றின் இருப்பு அறிக்கைகளில் இருக்கும் வாராக் கடன்களின் சுமைகளைக் குறைப்பதும், இந்திய அரசாங்கத்தின் முக்கியக் கொள்கை முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும்.’ என ஐ.ஹெச்.எஸ் மார்கிட் தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஜி.டி.பி-யில் உற்பத்தித் துறையின் பங்கு இன்னும் 18 சதவிகிதம்தான் உள்ளது. இதன் இலக்கு 25 சதவிகிதமாகும். அடுத்த இருபது ஆண்டுகளில், 75 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இந்தத் துறையில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2015 முதல் 2050 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 35 கோடி என்ற அளவில் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், மின்சாரம், சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து வசதிகள் போன்ற போதுமான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதில் அரசாங்கத்திற்குக் குறிப்பிட்ட நிதி நிலைச் சவால்கள் ஏற்படலாம்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் மூலம், இந்தியாவின் தொழில்துறையில் ஆக்கப்பூர்வமான மாறுதலை தொடர்ந்து செயலாக்குவது, செயலுத்தி ரீதியாக முக்கியத்துவத்தைப் பெறும். இதனால், உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் வெகுவாக அதிகரிக்கும். 2014 ஆம் ஆண்டு ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் துவக்கப்பட்டபோது, ஜி.டி.பி-யில், உற்பத்தித் துறையின் பங்கை 25 சதவிகிதமாக உயர்த்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், 2018 ஆம் ஆண்டில், ஜி.டி.பி-யில், உற்பத்தித் துறையின் பங்கு 18 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் முதல் பதவிக்காலத்தில், குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், தற்போது, போக்குவரத்து, மின்சாரம் போன்ற முக்கியத் துறைகளில் துரிதமான வளர்ச்சிக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும். 2019 ஆம் ஆண்டில், உலக வங்கியின், எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் வரிசையில், மொத்தமிருந்த 190 நாடுகளில் இந்தியாவிற்கு 77 வது இடம் கிடைத்தது.
ஆளும் கட்சிக்கு தேசியத் தேர்தல்களில் கிடைத்துள்ள அபாரமான வெற்றி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், பொருளாதாரக் கொள்கைகளின் சீரான தொடர்ச்சிக்கு உதவும். நாட்டை, வலுவற்ற கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட அரசாங்கம் நடத்தவில்லை என்பதால், பல அபாயங்கள் துவக்கத்திலேயே களையப்படுகின்றன. அப்படிப்பட்ட அரசாங்கம், பல பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான துரிதத்தைப் பாதித்திருக்கும் என்பது குறிபிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியப் பிரதமர் அவர்களின் கீழ், இந்தியா, நிலையான, திடமான மேக்ரோ பொருளாதார வளர்ச்சியை அடைந்து சாதனை செய்துள்ளது என்பதைக் குறிபிட்ட ஐ.ஹெச்.எஸ் மார்கிட் அறிக்கை, நாட்டை ஆள்வதிலும், அரசாங்கத்தின் பொருளாதார சாதனைகளிலும் செயல்களிலும், வாக்காளர்களுக்கு உள்ள நம்பிக்கை, இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு பிரதமர் மோதி அவர்கள் முதன்முறையாகப் பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 2 லட்சம் கோடி டாலராக இருந்தது, இவ்வாண்டு, 3 லட்சம் கோடி டாலர் என்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, ஐந்தே ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 லட்சம் கோடி டாலர் அதிகரிப்பை நாம் அடைந்திருக்கிறோம்.
திரு மோதி அவர்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவைகள் வரியின் செயலாக்கமாகும். 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சீர்திருத்தம், இந்தியாவில் ஒருமித்த ஒரே மறைமுக வரிச் செயல்முறையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இருந்த மாநிலம் சார்ந்த வேறுபட்ட மறைமுக வரிவகை என்ற சிக்கலான செயல்முறையை இது மாற்றியது. பழைய வரி வகையில், மாநில எல்லைகளைத் தாண்டி தங்களது பொருட்களைக் கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு அதிகமான போக்குவரத்து செலவுகள் போன்ற குறிபிட்ட குறைபாடுகள் இருந்தன. ஜி.எஸ்.டி, போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதோடு தொழில்துறைப் போட்டியையும் அதிகரிக்கும்.

Comments
Post a Comment