பிரதமர் திரு நரேந்திர மோதியின் பதவியேற்பும், இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியாவின் பங்களிப்பும்.


(ராஜீய விவகாரங்கள் செய்தியாளர் திபஞ்சன் ராய் சௌத்ரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

வங்காள விரிகுடா பல்நிலை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவுக் குழுவான பீம்ஸ்டெக் ஐச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களுக்கும், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கும், இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளின் தலைவர்களுக்கும், நரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாக பாரதப் பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இது, இந்தோ பசிபிக் பகுதியில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக இந்தியா முக்கியப் பங்களிப்பதற்கான எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

பங்களாதேஷின் அதிபர் அப்துல் ஹமீத் அவர்கள் இவ்விழாவில் பங்கேற்றார். இந்தியாவுடன் தற்போது பங்களாதேஷ் கொண்டுள்ள வலுவான உறவுக்குச் சான்றாக, இந்தியா வந்த பிரிதிநிதிக் குழுவுக்கும் அவர் தலைமை தாங்கினார். பிற பீம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்றதோடு, பிரதமர் திரு நரேந்திர மோதியின் இரண்டாவது ஆட்சியில் எடுக்க வேண்டிய முன்னெடுப்புக்கள் குறித்து, மரபுசாரா வகையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.