உற்பத்தித்துறையின் வளர்ச்சி.

(மூத்த பொருளாதாரப் பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறையான, ஆரோக்கியமான முன்னேற்றமாகத் தெரிவது, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் உறபத்தித்துறை வேகமெடுத்து வளர்ச்சி பெற்றதுதான். உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் சூழலில், அதன் தாக்கத்தில் அழுத்தத்தை இந்தியப் பொருளாதாரமும் பெற்றிருந்த நிலையில், இது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தை மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்பான எச்ஐஎஸ் நடத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் 52.7 புள்ளியாக இருந்த உற்பத்தித்துறை கொள்முதல் மேலாளர் குறியீடு, நடப்பாண்டு ஜனவரியில் 55.3 புள்ளியாக உயர்ந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் கண்டிராத வளர்ச்சியாகும் இது. இந்தியப் பொருளாதாரம் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியதன் அடையாளமாக இதனைக் கருதலாம்.

உற்பத்தித்துறை கொள்முதல் மேலாளர் குறியீடு குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள, எச்ஐஎஸ் 40க்கும் மேற்பட்ட உலகநாடுகளின் பொருளாதாரத்தை ஆய்வு செய்கிறது. தனியார் துறையின் உற்பத்தித்துறை கொள்முதல் மேலாளர்களிடையே மேற்கொள்ளும் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாதாந்திரத் தரவுகளை எச்ஐஎஸ் வெளியிடுவது வழக்கம். உற்பத்தித்துறை கொள்முதல் மேலாளர் குறியீடு 50 ஐத் தாண்டினால் பொருளாதாரம் விரிவடைவதாகக் கருதப்படும். நுகர்வோர் பொருட்களின் வளர்ச்சி மீண்டும் பிரகாசமாகியுள்ளது. இடைநிலைப் பொருட்கள் வளர்ச்சி வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. மூலதனப் பொருட்களில் மீண்டும் விரிவாக்கம் தென்படுகிறது. முதலீடுகள் புத்துணர்ச்சி பெற்றுள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது.

வெளிச் சந்தைகளின் வாயிலாக, புதிய தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும் இந்தக் குறியீடு சுட்டிக்காட்டுகிரது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் மிகவும் வேகமாகக் குவிந்து வருகின்றன. உறபத்தித் துறையின் விற்பனை, ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இடுபொருட்களின் விலையும் குறைந்துள்ளதால், உற்பத்தித்துறையில் லாபம் அதிகரிக்கும். உற்பத்திப் பொருட்களின் கட்டணம் உலோகங்கள், ஜவுளி மற்றும் உணவுத் துறைகளில் அதிகமாகவும், தாமிரம், பேக்கேஜ் பொருட்கள், ரப்பர் போன்ற பொருட்களில் குறைவாகவும் காணப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.